உள்நாடு

ஈட்டி எறியும் வீரர் ரூமேஷ் தரங்கவுக்கு சுற்றறிக்கையின் பிரகாரம் செலுத்தப்பட வேண்டிய 5 கோடி ரூபா தொகையை கொடுப்பதில் தாமதம் நிலவுவது ஏன்?

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சமையில் கேள்வி.

ஆசியப் போட்டிகள் மற்றும் பொதுநலவாயப் போட்டிகளில் ஈட்டி எறிதல் பிரிவில் முத்திரை பதித்த ரூமேஷ் தரங்க பத்திரகே நாட்டிற்கு பெரும் பெருமையை ஈட்டி வந்தார். 92.62 மீட்டர்கள் தூரத்துக்கு ஈட்டி எறிந்து சர்வதேச மட்டத்தில் முதலிடத்தை சுவீகரித்துள்ளார். இந்த இளைஞரினது வீட்டிற்குச் செல்லும் வீதியை 80 இலட்சம் ரூபா செலவில் அமைப்பதாகச் செய்திகள் வெளியான போதிலும், இதுவரை அந்த வீதி அமைக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இது போன்ற போட்டிகளில் வெற்றிபெறும் பட்சத்தில் அரசாங்கத்தின் உரிய சுற்றறிக்கைகளுக்கு அமைவாக 5 கோடி ரூபா கிடைக்கப்பெற வேண்டும். இருந்தபோதிலும், இதுவரை அந்த 5 கோடி ரூபா அவருக்கு வழங்கப்படவில்லை. இந்தத் தொகை எப்போது அவருக்கு வழங்கி வைக்கப்படும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். நாட்டிற்குச் உயரிய பெருமையையை ஈட்டித் தந்த ரூமேஷ் தரங்க ஒலிம்பிக் பதக்கத்தையும் வெல்லுவதற்கு இயலுமை கிட்டட்டும் என பிரார்த்திப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

விசேட சுற்றறிக்கை ஒன்றைக்கொண்டு வந்து அவருக்குச் செலுத்தப்பட வேண்டிய தொகையைக் குறைக்கப் போகிறார்கள் என்ற பேச்சும் அடிபடுவதால், அவருக்குச் செலுத்த வேண்டிய 5 கோடி ரூபா தொகையை விரைந்து வழங்குமாறு நான் யோசனை முன்வைக்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *