சம்மாந்துறையின் 10ஆவது ஜும்ஆ பள்ளிவாசலாக மல்கம்பிட்டி பள்ளிவாசல் பிரகடனம்
சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் கீழ் இயங்கும் ஜும்ஆ பள்ளிவாசல்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது. இதற்கமைய, மல்கம்பிட்டி கலந்தர் சிக்கந்தர் சியாரம் பள்ளிவாசல், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் 10ஆவது ஜும்ஆ பள்ளிவாசலாக நேற்று (19) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் கீழ் இதுவரை ஒன்பது ஜும்ஆ பள்ளிவாசல்கள் இயங்கி வந்த நிலையில், புதிய பள்ளிவாசலாக மல்கம்பிட்டி பள்ளிவாசல் பிரகடனப்படுத்தப்பட்டதன் மூலம் இவ்வெண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் குறித்த பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தெரிவித்துள்ளது.
இந்தப் பிரகடனத்தின் மூலம் மல்கம்பிட்டி பகுதி மக்களுக்கான ஜும்ஆ தொழுகை ஏற்பாடுகள் புதிய கட்டத்தை எட்டியுள்ளன.
(தில்சாத் பர்வீஸ்)
