உள்நாடு

இன்று மாலை முதல் நாடெங்கும் பலத்த மழை பெய்யலாம்

இலங்கைக்கு அருகில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டல தளம்பல் காரணமாக, இன்று (20) மாலை முதல் நாடு முழுவதும் மழையுடனான வானிலை தீவிரமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய, மத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ அளவிலான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அத்துடன், வட மற்றும் வடமேல் மாகாணங்களில் காலையிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் காலை வேளையில் மூடுபனி நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *