உள்நாடு

கத்தார் ஷரிடி நிதியொதுக்கீட்டில் 5000 பேருக்கு பயனளிக்கும் வார்ட் தொகுதி திறந்து வைப்பு

இலங்கையில் அனுராதபுரத்தில் 5,000 பேருக்கு பயனளிக்கும் புதிய மருத்துவமனை வார்டு தொகுதியை கத்தார் சாரிட்டி திறந்து வைத்தது

கத்தார் நாட்டுத் தொண்டர்களின் தாராள நன்கொடையால் நிர்மாணிக்கப்பட்ட புதிய மருத்துவமனை வார்டு தொகுதியை, அனுராதபுர மாவட்டத்தில் நாச்சாதுவ பிரதேச மருத்துவமனையில் கத்தார் சாரிட்டி இலங்கை, அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தது. 40 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இத்திட்டம், இலங்கையின் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு தரமான சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில் சுகாதார உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான கத்தார் சேரிட்டியின் தொடர்ச்சியான முயற்சிகளில் முக்கியமான
சாதனையாகும்.

260 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவ வார்டு சுகாதார மையம் சுமார் 5,000 பேருக்கு நேரடியாக பயனளிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் நீண்ட காலமாக நிலவி வந்த முக்கிய சுகாதார தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நோயாளிகளுக்கான பாதுகாப்பான, நவீன மற்றும் உகந்த சூழலை இந்த மையம் வழங்குகிறது மருத்துவமனை தொகுதியில் 14 நோயாளி படுக்கைகளுடன் கூடிய ஆண் மற்றும் பெண் வார்டுகள், தாதியர் நிலையம், மருத்துவர் ஆலோசனை அறை, மருந்து சேமிப்பு அறை, உணவுப் பகுதி மற்றும் சுகாதார வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இரத்த அழுத்தமானி கள், வெப்பமானிகள், ஆக்சிஜன் அளவீட்டு கருவிகள், ஸ்டெதஸ்கோப்பில், ஒட்டு ஸ்கோப் மற்றும் ஆப்தல்மஸ்கோப் கருவிகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை வழங்கப்பட்டுள்ளன.

இத் திறப்பு விழாவில் அரசாங்க அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள், மருத்துவமனை ஊழியர்கள், சமூகத் தலைவர்கள், பயனாளிகள் மற்றும் கத்தார் சாரிட்டி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நாச்சாதுவ பிரதேச மருத்துவமனையில் பொறுப்பதிகாரி டாக்டர் தர்ஷிகா ஆரியசேன, இந்த நவீன வார்டு தொகுதி மருத்துவமனையில் சேவை திறனை பெரிதும் மேம்படுத்தும் எனவும், கத்தார் சாரிட்டி மற்றும் அதன் நன்கொடையாளர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். பயனாளியான திரு. அபூசாலி நிஹார்தீனும், பல ஆண்டுகளாக நிலவி வந்த மருத்துவ வசதி பற்றாக்குறையை இந்த திட்டம் தீர்த்த உள்ளதாகக் கூறி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

கத்தார் சாரிட்டி இலங்கையின் நாட்டுப் பணிப்பாளர் மஹ்மூத் அபூ கலீஃபா, இந்த திட்டம் நன்கொடையாளர்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் சமூகத்திற்கிடையிலான வலுவான கூட்டாண்மையின் விளைவு எனக் குறிப்பிட்டார். அனைவரின் ஒத்துழைப்பிற்கும் நன்றி தெரிவித்த அவர், ஆரோக்கியமான சமூகங்களை உருவாக்குவதற்கும் கத்தார் சேரிட்டியின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
சுகாதாரம், கத்தார் சேரிட்டியின் இலங்கையில் முக்கிய துறைகளில் ஒன்றாகும். மருத்துவமனை கட்டுமானம், புதுப்பித்தல், கண்புரை அறுவை சிகிச்சைகள், ஊட்டச்சத்து திட்டங்கள், மருத்துவ உபகரணங்கள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயனடைந்துள்ளனர். நாச்சாதுவ மருத்துவமனை வார்டு தொகுதி, கத்தார் மக்களின் தாராள மனப்பான்மையையும், இலங்கையின் நிலையான சுகாதார அபிவிருத்திக்கான கத்தார் சேரிட்டியின் உறுதிப்பாட்டையும் எடுத்துக்காட்டும் ஒரு நிலையான சின்னமாக திகழ்கின்றது.

(அஷ்ரப் ஏ சமத்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *