உள்நாடு

தர்காநகர் நஜீப் ஹாஜியார் கல்வி நிலையத்தில் சிறுவர் தின, பரிசளிப்பு நிகழ்வுகள்

தர்கா நகர் நஜீப் ஹாஜியார் கல்வி நிலையத்தில் இயங்கும் பாலர் பாடசாலையில் உலக சிறுவர் தின நிகழ்வும் பரிசளிப்பு வைபவமும் அதிபர் ஷஸ்னா நைஸப் தலைமையில் மர்ஹும் அமீர் ஆலிம் ஞாபகர்த்த மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மேற்படி கல்வி நிலைய ஸ்தாபகர் கலாநிதி நஜீப் ஹாஜியார் பின் அமீர் ஆலிமின் வழிகாட்டலின் கீழ் உலக சிறுவர் தின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதோடு சிறார்களின் பல்வேறு கலை கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கலாநிதி நஜீப் ஹாஜியார் பின் அமீர் ஆலிம் சிறார்களுக்கு வாழ்த்துச் செய்தியொன்றையும் அனுப்பி வைத்திருந்தார். நிகழ்ச்சிகளின் இறுதியில் சிறார்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

(பேருவளை பீ.எம். முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *