உள்நாடு

மாகாண மட்டத்தில் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுக்கள்; நிகவெரட்டிய கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டில் தற்போது கொழும்பில் மாத்திரம் செயல்பட்டு வரும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவை (CIABOC), எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்படும் நிதியைப் பயன்படுத்தி அனைத்து மாகாணங்களிலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நிகவெரட்டியவில் நேற்று (11) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த ஆணைக்குழுவின் செயற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில், 900க்கும் மேற்பட்ட அதிகாரிகளைப் புதிதாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் ஊழல் மற்றும் மோசடிகளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அரச சேவையில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *