தேசிய இலக்கிய விழாவின் சிறுகதை போட்டியில் 2ஆம் இடத்தை பெற்றுக் கொண்டார் சமாதான நீதவான் எம். எல். எம். ஹாரிஸ் மௌலவி
ஹெம்மாதகமை தும்புளுவாவையைச் சேர்ந்த சாமஸ்ரீ, தேசகீர்த்தி முஹிபுல் அனாம் கலாபூஷணம். கலா சூரி. சமாதான நீதவான் எம். எல். எம். ஹாரிஸ் (மௌலவி) கலாச்சார அலுவல்கள் திணைக்களம் மற்றும் மாவனல்லை பிரதேச செயலகம் இணைந்து நடாத்திய பிரதேச இலக்கியப் போட்டித் தொடரில் “ஓடி விளையாடு பாப்பா” எனும் தலைப்பை முன்வைத்தமைக்காக திறந்த பிரிவில் சிறுகதை போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டார்.
2026 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி நடத்தப்பட்ட இலக்கிய விழாவில் சான்றிதழும் பரிசிலும் வழங்கப்பட்டது. மேலும் கவிதை போட்டியிலும் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


(ஜிப்ரி சரீப்)
