உள்நாடு

சியனே ஊடக வட்டத்தின் ஏற்பாட்டில் கஹட்டோவிட்ட முஅஸ்கருர் ரஹ்மான் அரபுக் கல்லூரி மாணவிகள் மற்றும் ஆலிமாக்களுக்கான ஊடக செயலமர்வு

சியனே ஊடக வட்டத்தின் ஏற்பாட்டில் கஹட்டோவிட்ட முஅஸ்கருர் ரஹ்மான் அரபுக் கல்லூரி மாணவிகள் மற்றும் ஆலிமாக்களுக்கான “Raise Your Voice” எனும் தொனிப்பொருளிலான ஊடக செயலமர்வு இன்றைய தினம் (11) சிறப்பாக இடம்பெற்றது.

சியனே ஊடக வட்டத்தின் தலைவரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளருமான கலாபூஷணம் அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வர் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வு அரபுக் கல்லூரி மாணவிகளின் அறிவிப்பாற்றல் மற்றும் பேச்சுத்திறன் என்பவற்றை மேம்படுத்தும் நோக்கில் இடம்பெற்றது.

இச்செயலமர்வில் வளவாளர்களாக சாகிர் மொஹமட் BA (ஒலிபரப்பாளர், நாடக கலைஞர் – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்), பஸ்ஹான் நவாஸ் (செய்தி ஆசிரியர் – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்), சியனே ஊடக வட்டத்தின் செயலாளர் எஸ்.ஏ.எம்.பவாஸ் MA (தகவல் அதிகாரி – அரசாங்க தகவல் திணைக்களம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

வளவாளர்களால் முறையே வானொலி நாடகங்களை உருவாக்குதல், செய்திகள் மற்றும் அறிவிப்புக்களை வாசித்தல் தொடர்பான பயிற்சிகள் என்பன மாணவிகளுக்கு சுவாரசியமான முறையில் செயன்முறைப் பயிற்சியுடன் பயிற்றுவிக்கப்பட்டதுடன், செயற்கை நுண்ணறிவு தொடர்பான விளக்கமும் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வுகளை சியனே ஊடக வட்டத்தின் உப தலைவரும் மீள்பார்வை பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியருமான பியாஸ் மொஹமட் தொகுத்து வழங்கினார்.

இதன்போது முஅஸ்கருர் ரஹ்மான் அரபுக் கல்லூரி அதிபர் அல் ஆலிமா முஷ்பிக்கா முஅஸ்கரிய்யா உள்ளிட்ட ஏனைய ஆலிமாக்கள், அர்கம் டிரவல்ஸ் உரிமையாளர் அல்ஹாஜ் ருஸ்தி உஸ்மான், சியனே ஊடக வட்டத்தின் பொருளாளரும் உதயம் பத்திரிகையின் ஆசிரியருமான சிராஜ் எம்.சாஜஹான், சியனே நியூஸ் இணையத்தளத்தின் செய்தி ஆசிரியர் ரிஹ்மி ஹக்கீம், சியனே ஊடக வட்டத்தின் மகளிர் பிரிவு தலைவி பயாஸா பாஸில் மற்றும் சனா அஞ்சும் ஆகியோர் கலந்து கொண்டதுடன் 50 இற்கும் மேற்பட்ட கஹட்டோவிட்ட முஅஸ்கருர் ரஹ்மான் அரபுக் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றமை விஷேட அம்சமாகும்.

செயலமர்வின் நிறைவில் கலந்து கொண்ட மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

சிறந்த முறையில் இச்செயலமர்வை நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய முஅஸ்கருர் ரஹ்மான் அரபுக் கல்லூரி அதிபர் உட்பட நிர்வாகத்தினருக்கு சியனே ஊடக வட்டத்தின் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டதுடன் செயலமர்வை சிறந்த முறையில் நடாத்தியதற்கு முஅஸ்கருர் ரஹ்மான் அரபுக் கல்லூரி சார்பில் சியனே ஊடக வட்டம் உட்பட வளவாளர்களுக்கு நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *