உள்நாடு

Angel Curve & Black Rose ஏற்பாட்டில் AESTHETIC MASTER TRAINING COURSE யின் இறுதி நாள் கௌரவிப்பு நிகழ்வு

ஏன்ஞல் கர்வ் மற்றும் ப்(B)ளெக் ரோஸ் நிறுவனங்களின் கூட்டமைப்பில், இந்தியாவின் எஸ்.கே பியூட்டி வர்ஸ் குழுவினரால் நடாத்தப்படும் ஐந்து நாள் செயலமர்வின் கௌரவிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அஷ்ரஃப் ஷமீலா ரிஸ்வான் மற்றும் ஏ.ஸீ.எப். ப(F)ஹீமா ஆகியோரின் தலைமையில் சிறப்பாக கடந்த (09) கொழும்பில் நடைபெற்றது.

இப் பயிற்சி நெறியில் அழகுக்கலை சார்ந்த பல்வேறு முக்கிய விடயங்கள் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டதுடன், செய்முறைப் பயிற்சிகளும் நேரடியாக வழங்கப்பட்டன.

நிகழ்வின் அதிதிகளாக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தமிழ் செய்திப் பிரிவு, பணிப்பாளர் சி.பி.எம்.சியாம் , கௌரவ அதிதிகளாக பேராசிரியர் கே. முகமது கபீர், சர்வதேச பயிற்றுவிப்பாளர் கார்த்திக். எஸ் , ஆர் ஜே மீடியா ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் ஏ எம் இன்ஷாப், சுவிஸ் பாரடைஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி அரூஸ் போன்ற பலரும் கலந்து சிறப்பித்தனர்.

ஐந்து நாட்களைக் கொண்ட இவ் அமர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அதிதிகளும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *