உள்நாடு

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் புத்தளம் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “OPEN DAY 2026”

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் புத்தளம் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “OPEN DAY 2026” நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (04) சிறப்பாக நடைபெற்றது.

பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பாடநெறிகள், கல்வி வாய்ப்புக்கள், உயர் கல்வி வழிகாட்டல்கள் மற்றும் எதிர்கால தொழில் வாய்ப்புகள் தொடர்பாக புதிய மற்றும் எதிர்கால மாணவர்களுக்கு அறிமுகமும், வழிகாட்டலும் வழங்குவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக அமைந்தது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக புத்தளம் மாநகர முதல்வர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் கலந்துகொண்டு நிகழ்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து பல்வேறு கல்வி, தொழில் நுட்ப மற்றும் தொழில் வழிகாட்டல் காட்சிப் பிரிவுகளையும் பார்வையிட்டு, மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக குழுவினருடன் கலந்துரையாடினார்.

மாணவர்கள் தமது உயர்கல்வி மற்றும் எதிர்கால தொழில் பாதைகள் குறித்து தெளிவான தீர்மானங்களை மேற்கொள்ள இவ்வாறான நிகழ்வுகள் பயனுள்ள தளமாக அமைகின்றன.

எம்.யூ.எம்.சனூன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *