ரணிலின் லண்டன் பயண வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு குற்றச்சாட்டு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (30) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், தனது மனைவி மைத்திரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக தனிப்பட்ட பயணமாக லண்டன் சென்றபோது, அரசாங்கத்திற்கு 15 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் இன்று நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளன.
