நீதமன்ற அவமதிப்பு வழக்கு; திலித்தின் ரிட் மனு நிராகரிப்பு
பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (30) நிராகரித்துள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டி கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை வலுவிழக்கச் செய்யும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர இந்த ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையின்போது, மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த ரிட் மனுவைத் நிராகரித்துள்ளது.
