உள்நாடு

சீனன்கோட்டை கல்வி மைய கட்டட திறப்பு விழா இன்று

பேருவளை சீனன்கோட்டை நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருக்கும் சீனன்கோட்டை கல்வி மையம் கட்டட திறப்பு விழா எதிர்வரும் 28ம் திகதி இன்று திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் கல்லூரி அதிபர் திருமதி பஹீமா பாயிஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஜாமியா நளீமியா கலாபீட முதல்வர் அஷ்ஷேஹ் அகார் முஹம்மத் (நளீமி) பிரதம அதிதியாக கலந்து கொண்டனர். மேலும் சீனன்கோட்டை பள்ளிசங்க உறுப்பினர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள், அரசியல் பிரமுகர்கள், பெற்றோர்கள், பழைய மாணவிகள் சங்க உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் என பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பரோபகாரியின் நிதியுதவியினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள இக்கட்டிடம் இவ்வூரின் கல்வி வரலாற்றில் ஒரு மைற்கல்லாக கருதப்படுகிறது. ஏனெனில் இவ்வூரின் கல்வி வளர்சசிக்கும், ஒழுக்கவியல் மேம்பாட்டிற்கும் உறுதுணையாக இருப்பதோடு, சன்மார்க்க வழிகாட்டலுடன் கூடிய பெண்களின் உடல், உள ஆரோக்கியம், சமூக வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டமிடலுக்கான மையப்புள்ளியாகவும் அமைய இருக்கிறது.

இப் பாடசாலையின் நீன்ட நாள் தேவையாக இருந்த கல்வி கற்பிக்கும் ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கான தங்குமிட வசதிகள் பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டள்ளது. இப் பாடசாலைகளை மையப்படுத்தி 2007 ம் ஆண்டிலிருந்து இயங்கிவரும் Science Project ன் கா.பொ.தர கணிதம், விஞ்ஞானம் மற்றும் வணிகம் போன்ற துறைகளை கற்பிப்பதற்கான மையமாகவும் இக்கட்டிடம் திகழும். குறிப்பிட்ட science project ன் மூலமாக கடந்த காலங்களில் பல வைத்தியர்கள், மொறியியலாளர்கள், கணக்காலர்கள் மற்றும் துறைசார்ந்தோர் உருவாக்கப்பட்டுள்ளனர். இக்கட்டிடம் இம்முயற்சிக்கு அச்சாணியாக திகழும் என எதிர்பார்கப்படுகிறது.

இக்கட்டிடத்தின் இன்னோர் தனிச்சிறப்பாக ஒரே கூரையின் கீழ் கேற்போர் கூடம், மாநாட்டு மண்டபம், சந்திப்பு/ ஆலோசனை அறை, விரிவுரை அறை, நிர்வாக குழு அறை மற்றும் பெண்களுக்கான பிரத்தியேக தொழுகை அறை என ஆன்மீகத்துக்கும் அறிவுக்கும் கலம் அமைக்கும் இடமாகவும் இக்கட்டிடம் திகழும். அவ்வாறே பெண்களின் உடல், உள ஆரோக்கியத்தை மையப்படுத்திய கணனி மயப்படுத்திய வாசிக சாலை, உளவள ஆலோசனை மையம், உடல் ஆரோக்கியத்திற்கான விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி வசதிகள் என பல வேலை திட்டங்களின் மையமாக இக்கட்டிடம் அமையும் என எதிர்பார்ககப்படுகிறது.

சிந்தனைகளின் முன்னோடி கல்வித்தந்தை மர்ஹூம் எம்.ஐ.எம். நளீம் ஹாஜியாரின் பெயரில் அமைந்த இக்கல்லூரி எதிர்கால சமூகத்தின் கலங்கரை விளக்காக ஒளிர்விட இக்கட்டிடம் பெரிதும் பங்களிப்பு செலுத்தும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

(பேருவளை பீ.எம். முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *