ஹபீப் றிபானுக்கு கல்குடா தொகுதி முஸ்லீம் பிரதேசத்தில் அமோக வரவேற்பு.
முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் வேறு கட்சிக்கு மாறியதன் காரணமாக, கட்சியின் வாக்குகள் பிரிக்கப்பட்டு கல்குடா தொகுதியில் பெற்று வந்த ஆசனம் கைநழுவிப் போனது என பாராளுமன்ற உறுப்பினர் ஹபீப் ரிபான் தெரிவித்தார்.
முஸ்லீம் காங்கிரசினால் கல்குடா தொகுதி முஸ்லீம் பிரதேச மக்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொண்ட ஹபீப் ரிபான் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமானம் செய்ததன் பின்னர் நேற்று (சனிக்கிழமை) மாலை தனது பிரதேசத்திற்கு வருகை தந்தபோது பிரமான்டமான வரவேற்பு வழங்கப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடா தொகுதி மத்திய குழுவின் ஏற்பாட்டில் ஓட்டமாவடி கேணிநகர் ஹம்து ஜும்ஆ பள்ளிவாசல் முன்றலில் இருந்து ஆரம்பமான ஊர்வலம்
காவத்தமுனை, ஓட்டமாவடி மணிக்கூட்டுச் சந்தி, வாழைச்சேனை, பிறைந்துறைச்சேனை, மாவடிச்சேனை, செம்மண்ணோடை, மாஞ்சோலை பதுரியாநகர் மீராவோடை வழியாக சென்று நிறைவுற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாசலுக்கு முன்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில்:
“1989-ஆம் ஆண்டிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றி வருகிறது. குறிப்பாக 2000, 2001 மற்றும் 2004 ஆகிய மூன்று முறையும் தொடர்ச்சியாக கல்குடா தொகுதி சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் கிடைத்தது.
எனினும், முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் வேறு கட்சிக்கு மாறியதன் காரணமாக, கட்சியின் வாக்குகள் பிரிக்கப்பட்டு கல்குடா தொகுதியில் பெற்று வந்த ஆசனம் கைநழுவிப் போனது.
இம்முறை முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் வெற்றிடத்திற்குப் பல இடங்களில் கடுமையான போட்டி நிலவிய போதிலும், கல்குடா மக்களைக் கௌரவிக்க வேண்டும் என்ற நோக்கில், தேசிய தலைவரின் விருப்பத்திற்கிணங்க எனக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.”
எனக் குறிப்பிட்டார்.








எஸ்.எம்.எம்.முர்ஷித்.
