உள்நாடு

இலங்கை கடற்படை நாட்டின் வடக்குக் கரையில் மேற்கொண்ட நடவடிக்கையில் பெரும் தொகையான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை (2026 செப்டம்பர் 27) அதிகாலை யாழ்ப்பாணம் மாதகல், குசுமன்துறை கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது போதைப்பொருள் தொகையொன்றைக் கைப்பற்றியுள்ளனர். வடக்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான படகுப் பிரிவு மற்றும் இலங்கை கடற்படை கப்பல் அக்போ நிறுவனத்தின் பணியாளர்களால் இன்று அதிகாலை ஆரம்பிக்கப்பட்ட இந்நடவடிக்கையின் போது, இக்கடத்தலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒரு சந்தேகநபரும் (01) படகொன்றையும் இவ்வாறு கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

கைப்பற்றப்பட்ட சட்டவிரோதப் பொருட்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் நிபுணத்துவ பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் குறித்த போதைப் பொருள் தொகுதியில் ஐஸ் மற்றும் ஹெரோயின் ஆகிய போதைப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடற்படையினர் தற்போது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *