உள்நாடு

ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்கும் நாட்டை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்- எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்து அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் நாட்டின் 220 இலட்சம் மக்களின் ஜனநாயக உரிமை இழக்கப்பட்டு, அவர்கள் தோல்வியடைந்துபோயுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 22 ஆவது திருத்தம் தொடர்பான வாக்கெடுப்பின் பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இன்று ஜனநாயகத்திற்கு ஒரு இருண்ட யுகமே உருவாகியுள்ளது. ஜனநாயகத்தை அழித்து, ஜனநாயகத்தைச் சுருக்கும் சர்வாதிகார அரசாங்கத்திற்கு அடித்தளமிட்டு, தனிக்கட்சி ஆட்சியை முன்னெடுக்கும் நடவடிக்கையை அரசாங்கம் தொடர்ந்து வருவது என்று சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவரையும், நாட்டின் பெரும்பான்மையான மக்களையும் ஒன்றுதிரட்டிக் கொண்டு, மக்களுக்கு விரோத, ஜனநாயகத்திற்கு எதிரான, ஜனநாயகத்தைக் கொலை செய்ய வந்துள்ள தற்போதைய அரசாங்கத்தைத் தோற்கடிக்க வேண்டும். கட்சித் தலைமையகத்திலிருந்து நிர்வகிக்கப்படும் நாடாக அல்லாமல், ஜனநாயகம் பாதுகாக்கப்பட்ட நாடே வேண்டும். இதற்காக ஐக்கிய மக்கள் சக்தி அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *