உலக வலிமை பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் ‘ஹேக் லிஃப்ட்’ நிகழ்வில் விமானப்படை வீரர் துலித் தசநாயக்க உலக சாதனை படைத்தார்
கிர்கிஸ்தானில் 13வது உலக வலிமை பளுதூக்கும் சாம்பியன்ஷிப் 2026-ல் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை விமானப்படைவீரர் துலித் தசநாயக்க, 95 கிலோ எடைப் பிரிவின் கீழ் ‘ஹேக் லிஃப்ட்’ நிகழ்வில் போட்டியிட்டார். அவர் 260 கிலோ எடையைத் தூக்கி, அந்நிகழ்வில் ஒரு புதிய உலக சாதனையை நிகழ்த்தி, சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தினார்.
இந்த போட்டிகள் கடந்த 2026 செப்டம்பர் 07 தொடக்கம் 11ம் திகதிவரை நடைபெற்றதோடு குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்திய கோப்ரல் துலித் தசநாயக்க, கடந்த (15 செப்டம்பர் 2026) நாடு திரும்பினார். அவரது சாதனையைப் பாராட்டும் விதமாக, 23 செப்டம்பர் 2026 அன்று ஹிங்குரகொடவில் உள்ள இலங்கை விமானப்படைத் தளத்தில் அவருக்கு ஒரு சிறப்பான வரவேற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கை விமானப்படை பளுதூக்கும் அணியின் தலைவர், எயார் கொமடோர் சனோஜ் ஜெயரத்னவின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், விமானப்படை பளுதூக்கும் சங்கத்தின் உறுப்பினர்கள் உட்பட பல விமானப்படை வீரர்கள் கலந்து கொண்டனர்.




