Friday, September 25, 2026
Latest:
உள்நாடு

சிறப்பாக நடைபெற்றது வரலாற்று பிரசித்தி பெற்ற சீனன் கோட்டை குட்டிமலை ஜலாலிய்யா ஸாவியா ஜும்ஆ பள்ளிவாசலில்காதிரிய்யா மனாகிப் மஜ்லிஸின் தமாம் நிகழ்வு

வரலாற்று பிரசித்தி பெற்ற பேருவளை சீனன் கோட்டை குட்டிமலை ஜலாலிய்யா ஸாவியா ஜும்ஆ பள்ளிவாசலில் வருடாந்தம் நடைபெறும் காதிரிய்யா மனாகிப் மஜ்லிஸின் தமாம் நிகழ்வு 22ம் திகதி (22.09.2026)செவ்வாய்க் கிழமை அஸர் தொழுகையைத் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றது.

அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபை நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் சீனன்கோட்டை பள்ளிச் சங்க இணைச் செயலாலருமான கலீபதுஷ்ஷாதுலி அஷ்ஷெய்க் அல்ஹாஜ் ஏ.எச். இஹ்ஸானுதீன் அபுல் ஹஸன் (நளீமி) நிகழ்வுக்கு தலைமை வகித்தார்.

காதிரிய்யா தரீக்காவின் ஸ்தாபகர் அல்குத்புல் அக்தாப் கௌதுல் அஹ்லம் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (றழி) அவர்களின் மறைவு (வபாத்) தினத்தை முன்னிட்டு இம் மஜ்லிஸ் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 13ம் திகதி (13.09.2026) அஸர்தொழுகையைத் தொடர்ந்து இந்த மஜ்லிஸ் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற்று தமாம் பெரிய கந்தூரியுடன் நிறைவு பெற்றது.

21ம் திகதி இரவு திக்ர் மஜ்லிஸும், புனித அல்குர்ஆன் தமாமும் இடம்பெற்றது. கலீபதுஷ் ஷாதுலி மௌலவி என்.எம்.ஸெய்னுல் ஆப்தீன் (பஹ்ஜி) ஹழரா மஜ்லிஸை நடாத்தினார்.

தமாம் நிகழ்வில் ஐதுரூஸியதுல் காதிரிய்யா தரீக்காவின் கலீபாவும் பிரபல உலவியலாளருமான அல்ஹாபிழ் மௌலவி எம்.ஸீ.எம். முஸ்தகீம் (நஜாஹி) ஆத்மீக ஞானி குத்புல் அக்தாப் கௌதுல் அஹ்லம் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (றழி) அவர்களின் அழகிய வாழ்க்கை வழிமுறை தொடர்பில் விஷேட சொற்பொழிவாற்றினார்.

மேற்படி ஸாவியாவின் இமாம்களான மௌலவி முகத்தமுஷ்ஷாதுலி எம்.டப்.எம். பஹ்ருத்தீன் (மிஸ்பாஹி), மௌலவி எம். இக்ராம் (நுலாரி), ஹாபிஸ் முஹம்மத் இல்ஹாம் ஆகியோர் தினமும் நடைபெற்ற மனாகிப் நிகழ்வுக்கு தலைமை தாங்கினர்.

தமாம் நிகழ்வில் கலீபாக்கள், சீனன்கோட்டை பள்ளிச் சங்க இணைச் செயலாளர் களான அல்ஹாஜ் எம்.எம்.எம். ஷிஹாப், அல்ஹாஜ் அரூஸ் அனஸ் மற்றும் உறுப்பினர்களான அல்ஹாஜ் முஸ்னி உவைஸ், அல்ஹாஜ் தஹ்லான் மன்ஸூர், மேற்படி தர்கா ஸாவியா மஸ்ஜிதின் நிர்வாகிகள், இஹ்வான்கள் எனபெரும் திறளானோர் கலந்து கொண்டனர்.

பேருவளை பீ.எம். முக்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *