Friday, September 25, 2026
Latest:
உள்நாடு

அம்பாறை மாவட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் 3ஆம் காலாண்டு கூட்டம்

சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் 3ஆம் காலாண்டுக்கான கூட்டம் அம்பாறை மாவட்ட செயலகத்தின் ஏ.ஐ.விக்கிரமசிங்க மண்டபத்தில் இன்று (24) இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் சுப்பிரமணியம் கரன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் மாவட்ட சமுர்த்தி முகாமையாளர் தரங்கனி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளின் பிரச்சினைகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும் இதன் போது பிரதேச அமைப்பின் தலைவர்களுக்கான உத்தியோகபூர்வ அடையாள அட்டையும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி வங்கிச் சங்க முகாமையாளர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏ.எச்.எம்.ஹாரீஸ், பளீல் ஏ மஜீட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *