உள்நாடு

சம்மாந்துறை போக்குவரத்து பொறுப்பதிகாரிக்கு பிரியாவிடை

சம்மாந்துறை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் ஏ.டி.ஆர். விஜேவர்த்ன தற்காலிக இடமாற்றம் பெற்று செல்லவுள்ளதை முன்னிட்டு, அவருக்கான பிரியாவிடை நிகழ்வு நேற்று (22) செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப்குமார தலைமையில் நடைபெற்றது.

இதன் போது சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப்குமார கருத்து தெரிவிக்கையில் “சம்மாந்துறையில் கடமையாற்றிய காலப்பகுதியில், வீதி ஒழுங்குகளைப் பேணுதல், போக்குவரத்து சட்டங்களை அமுல்படுத்துதல் மற்றும் வீதி பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளில் அவர் ஈடுபட்டார்.

அத்துடன், பாடசாலைகள் மற்றும் தனியார் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்ட இளைஞர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பிரதேசத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதிலும் விஜேவர்த்ன பங்களித்ததாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், புதிய பணியிடத்திலும் சிறப்பாக சேவையாற்ற வேண்டுமென பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

(தில்சாத் பர்வீஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *