விளையாட்டு

இலங்கையை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா; இலங்கைக்கு வெள்ளிப்பதக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று (22) இடம்பெற்ற மகளிர் ரி20 கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை மிக இலகுவாக வீழ்த்திய இந்திய அணி தங்கம் வென்றதுடன், இலங்கை அணி வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கியது.

தீர்மானமிக்க இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது. 

அதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 216 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

இந்திய மகளிர் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஸ்மிர்த்தி மந்தனா 79 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார். 

இந்நிலையில் 217 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை மகளிர் அணி 15.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 69 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 147 ஓட்டங்களால் படு தோல்வியடைந்தது. 

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சமரி அத்தபத்து 29 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார். 

எவ்வாறாயினும் ஆசிய விளையாட்டு போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்ற இலங்கை அணிக்கு வௌ்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *