உள்நாடு

22 வது அரசியலமைப்பு திருத்தம்; உயர்நீதிமன்றத் தீர்ப்பு நாளை சபையில் அறிவிப்பு

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய இரகசியத் தீர்மானத்தை சபாநாயகர் நாளை (22) பாராளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலித்த பின்னர், உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய, பாராளுமன்றத்தில் சட்டமூலம் தொடர்பான விவாதங்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கு முன்னர், உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் சபையில் அறிவிக்கப்படுவது வழமையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *