மத்திய முகாம் உஸ்வா அஹதிய்யா மாணவர்களின் வருடாந்த பரிசளிப்பு மற்றும் கலாசார நிகழ்வு
அம்பாறை மாவட்டம், மத்திய முகாம் பிரதேசத்தில் சிறப்பாக இயங்கி வரும் உஸ்வா அஹதிய்யா மாணவர்களின் வருடாந்த பரிசளிப்பு மற்றும் கலாசார நிகழ்வு மத்திய முகாம் ஜி.எம்.எம்.எஸ். பாடசாலை மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
அஹதிய்யா பாடசாலையின் அதிபர் அஷ்ஷெய்க் தௌபீக் (இஸ்லாஹி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாணவர்களின் கல்வி மற்றும் திறமைகளைப் பாராட்டும் வகையில் பரிசளிப்புக்கள் இடம்பெற்றன.
வருடா வருடம் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பரிசளிப்புக்கள் என்பன இடம்பெற்று வருகின்றமை மாணவர்கள் மத்தியில் உட்சகத்தையும் அகதிய்யா பாடசாலையின் மகத்துவத்தையும் ஏற்படுத்துகின்றது.
மாணவர்களின் கல்வி, ஒழுக்கம், கலை மற்றும் கலாசாரத் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு, பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது.
இந்நிகழ்வில் ஊர் பிரமுகர்கள், கல்வியாளர்கள், புத்திஜீவிகள், அரசியல் பிரதிநிதிகள், உலமாக்கள், தொழிலதிபர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். இளம் தலைமுறையின் கல்வி வளர்ச்சியோடு, அவர்களின் ஆளுமை மற்றும் கலாசாரத் திறன்களையும் வளர்க்கும் முயற்சிகளுக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது


















ஏ.எச்.எம்.ஹாரீஸ்
