Sunday, September 20, 2026
Latest:
உள்நாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தமிழரசுக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ. எம். ஷாஜஹான் சந்தித்து முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சி குறித்து ஆலோசனை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தமிழரசுக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ. எம். ஷாஜஹான் சந்தித்து முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சி குறித்து ஆலோசனை செய்து முதல்வர் அவர்கள் ஆட்சி குறித்து விளக்கினார்.

தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ. எம். ஷாஜஹான் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்தார். அவர் இலங்கைக்கு வந்த போது பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும், பல்வேறு சமூக ஆர்வல்களையும் சந்தித்து பேசினார்.

தமிழகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சி எப்படி நடக்கிறது என்றும் இலங்கை தமிழர்கள் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்வதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஏற்பாட்டில்
இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுபாண்மை கட்சிகளின்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தமிழரசுக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்
தேசிய நிர்வாகிகளோடு கொழும்பு
மனுயும்பதி ஹோட்டலில் 19.09.2026 சனிக்கிழமை மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமை வகித்தார்.

இந்த கூட்டத்தில் முஸ்லிம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்வுல்லாஹ், நிசாம் காரியப்பர், எம்.எஸ். உதுமாலெப்பை, முஜிபுர் ரஹ்மான், தமிழரசுக் கட்சியின் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ. எம். ஷாஜஹான் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார். பின்னர் முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சியை பற்றி பல்வேறு மக்களுக்குமான திட்டம், ஆட்சி நிர்வாகம் பற்றி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் ஏ. எம். ஷாஜஹான் விளக்கம் அளித்தார்கள்.

தமிழரசுக் கட்சியின் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்கள் சாணக்கியன் இராசமாணிக்கம்,
முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை டிசம்பர் மாதத்தில் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேச நாங்கள் ஒரு குழுவினருடன் வருகிறோம். அதற்கு எல்லாம் ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்கள்.

அதற்கு அமைச்சர் ஏ. எம். ஷாஜஹான் பேசுகையில்: இந்த சந்திப்பை ஏற்பாடு செய்த ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு முதலில் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு இலங்கையில் உள்ள மக்கள் பொதுவாக தமிழ் பேசும் அனைத்து மக்கள் பெரும் ஆதரவு இருப்பதை நான் நேரில் பார்த்து தெரிந்து கொண்டேன்.

அதேபோல் அவர் ஆட்சி மிகச் சிறப்பாக இருக்கும். நீங்கள் வைத்த கோரிக்கையை முதல்வரிடம் நான் நேராக சந்தித்து உங்களை குழுவினரை சந்திக்க தேதி வாங்கி தருவதோடு இலங்கை மற்றும் தமிழ்நாடு இணைந்து செய்ய வேண்டிய பல்வேறு விஷயங்களை குறித்து அதற்கு தகுந்த பலன்கள் கண்டிப்பாக கிடைக்கும் என்று அமைச்சர் ஏ. எம். ஷாஜஹான் உறுதி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முஸ்லிம் காங்கிரஸ் பொத்துவில் தவிசாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஸர்ரப், முஸ்லிம் காங்கிரஸ் கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் மற்றும் மு.கா பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரத்தியேக செயலாளர் ஜஸாஉல் முபாரிஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில துணைச் செயலாளர் ஜமால் முஹம்மது இப்ராஹிம், மாநில மாணவரணி செயலாளர் ஷாஃபிக் அஹமது, முத்த ஊடகவியலாளர் திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *