தமிழர்களும் முஸ்லிம்களும் முட்டி மோதிக்கொள்கின்ற நிலை தவிர்க்கப்பட வேண்டும்.
மு.கா.பேராளர் மாநாட்டில் ரவூப் ஹக்கீம்.
நாட்டின் அடுத்த கட்ட அரசியலை தீர்மாணிக்கின்ற சக்தியாக தமிழ் பேசும் சமூகங்கள் வந்தாக வேண்டும் என்ற நோக்கத்திலே தமிழ் பேசும் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம்களும், தமிழர்களும் முட்டிமோதும் நிலைமைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
சிறுபான்மை சமூகங்கள் மீது ஆட்சியாளர்கள் தொடர்ந்து அலட்சியப்போக்கோடு நடந்து கொள்வார்களாக இருந்தால் கடந்த உள்ளுராட்சி தேர்தலில் அவர்களுக்கு புகட்டிய பாடத்தைப் போன்று அடுத்துவரும் தேர்தல்களில் நல்லதொரு பாடத்தை புகட்டுவதற்கு நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்தலைவர் மர்ஹம் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் 26ஆவது நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
நாம் கட்சியாம் இயங்க ஆரம்பித்தபோது கிழக்கில் பேரினவாத கட்சிகளுக்கு சிம்மசொப்பனமாக நாங்கள் இருந்தோம். ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திர கட்சி, பொதுஜன பெரமுன , ஐக்கிய மக்கள் சக்தி, போன்றவை முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தோடு மோதி தனது ஆசனங்களை பெறுவதில் மிகப் பெரிய சிக்கல்களை எதிர்கொண்டன.
பலமான கட்சியாக உருவெடுத்த நாம் கடந்த இரண்டான்டு க்கு முன்னர் நடந்த மக்கள் போராட்டத்தின் பின்னணியில் ஏற்பட்ட விரக்தி மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தாக்கங்கள் பாரிய அளவில் சிங்கள மக்கள் மத்தியில் மனப்பதிவுகளை ஏற்படுத்தியதன் விழைவாக சிறுபான்மை கட்சிகளின் தயவு இல்லாமல் ஜனாதிபதி தேர்தலை வென்றெடுப்பது என்பது சவாலுக்குரிய விடயமாக பார்க்கப்படுகின்றது.
அதுபோல் இனி இடம்பெறக்கூடாது என்பதில் நாம் மிகக் கவனமாக இருக்கின்றோம். இந்த அசாதாரனமான சூழ்நிலையில் ஜனாதிபதி தேர்தல் முடிவுற்றது. அசாதாரன நேரத்தில் அசாத்தியமான தேர்தல் முடிவு இதுவாகும்.
ஜனாதிபதி தேர்தலில் வெரும் 44சதவீதம் பெற்றவர் பாராளுமன்ற தேர்தலில் 159 ஆசனங்கள் பெற்று சரித்திரம் படைத்துள்ளோம் என்று ஆணவத்துடனும் அகங்காரத்துடனும் கதைத்து திரிந்தால் உள்ளுராட்சி தேர்தலில் வழங்கிய பாடத்தையே புகட்ட நேரிடும்.
இந்த நாட்டின் அடுத்த கட்ட அரசியலை தீர்மாணிக்கின்ற சக்தியாக தமிழ் பேசும் சமூகங்கள் வந்தாக வேண்டும் என்ற நோக்கத்திலே தமிழ் பேசும் மக்கள் பேரவை என்ற ஒன்றை உருவாக்கிய உள்ளோம். மட்டக்களப்பு கோரளைப்பற்று, கல்முனை எல்லைப் பிரச்சினைகள் இருக்கின்றது. தமிழ் பேசும் சமுகங்களுக்கிடையில் முட்டி மோதுகின்ற ஒரு நிலவரம் இருப்பதை நாம் காண்கின்றோம். இந்த பேரவையை நாங்கள் செயற்படுத்துகின்ற போது இடையில் இருக்கின்ற இவ்வாரான சில முரண்பாடுகள் அதற்கு தடையாக இருக்கக் கூடாது இதற்காக உப குழுக்களை அமைத்து பேசப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்ற படு மோசமான நிகழ்வு மூலம் எமது சமூகத்தின் மீதும் இந்த காத்தான்குடி மீதும் மிகப் பெரிய பழியை சுமத்திய போது எல்லோரும் விழி பிதிங் தி செய்வதரியாது தடுமாறிய போது உண்மை எது வென்று நாங்கள் சொல்வதற்காக பல சந்தர்ப்பங்களில் எமது ஆசனங்களைக் கூட தியாகம் செய்து கூட்டாக இராஜினாமா செய்து பல போராட்டங்களை நடாத்தி இருக்கின்றோம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னனியிலே புலனாய்வுத்துறை இருந்ததா? என்ற கேள்விக்கு புலனாய்வு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதன் பின்னனியில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த அரசாங்கம் சரிவர விசாரணை செய்து உண்மை வெளிப்பட வேண்டும் என்று சொல்லும் அதேநேரம் தமிழ் பேசும் பேரவையை குழப்புவதற்காக வடக்கு வைத்தியசாலை சம்பவத்தை மையப்படுத்தி சிந்து விளையாட்டை செயற்படுத்த முனைந்தனர்.
எவ்வாறு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதி மேற்கொள்ளப்பட் டதோ அவ்வான சதித் திட்டங்கள் இன்னும் பல அரங்கேற்றப்படலாம் நாம் அவதானமாக இருக்க வேண்டும் என்று எமது சக தமிழ் பேசும் தலைமைகளுடன் பேசி வருகின்றோம் அவதானமாகவும் இருக்கின்றோம்.
நமது இளைஞர்களின் எதிர்காலம், கல்வி வாய்ப்புகள் மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் நாம் கூடுதல் கவனத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. சமூகத்தில் நிலவும் குழப்பங்களுக்கும் கருத்து வேறுபாடுகளுக்கும் மத்தியில், நாம் அனைவரும் ஒரே நேர்கோட்டில் ஒற்றுமையாக நிற்பதே நமது பலமாகும். நாம் பிரியும்போது நமது குரல் பலவீனமடைகின்றது; ஆனால் நாம் ஒன்றிணைந்து நிற்கும்போது நமது கோரிக்கைகளை எவராலும் புறக்கணிக்க முடியாது
எனவே, உணர்ச்சிவசப்படாமல் சிந்தனையோடும் விழிப்புணர்வோடும் நாம் அனைவரும் பயணிக்க வேண்டும். வரவிருக்கும் காலங்களில் நமது உரிமைகளை வென்றெடுக்கவும், நமது பிரதேசத்தின் அபிவிருத்தியை உறுதி செய்யவும் உங்களுடைய முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வேண்டி நிற்கின்றேன் என்றார்.
