உள்நாடு

“மீலாத் வசந்தம் – 2026” வெல்பொத்துவெவவில் மார்க்க அறிஞர்களுக்கு பெருமை

மீலாதுன் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, இர்ஷாத் ஏ. காதர் நற்பணி மன்றம் ஏற்பாடு செய்திருந்த ‘ஸீறத்துன் நபி சிறப்பு நிகழ்ச்சி’, வெல்பொத்துவெவ அல் – இல்மியா மகா வித்தியாலய மைதானத்தில், (12) சனிக்கிழமை இரவு இடம்பெற்றது.

‘மீலாத் வசந்தம் – 2026’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, வெல்பொத்துவெவ கிராமத்திலுள்ள உலமாக்கள் சமூக சேவைக்கான அங்கீகாரமாகக் கௌரவிக்கப்பட்டனர்.

சமய விவகார பிரதி அமைச்சர் அஷ்ஷெய்க் முனீர் முளப்பர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அஸ்லம் ஆகியோர் கலந்து கொண்டு உலமாக்களைப் பாராட்டி கௌரவித்தனர்.

இந்நிகழ்வு முஸ்லிம் – சிங்கள மக்களிடையே சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

நிகழ்வில், உலமாக்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

( ஐ. ஏ. காதிர் கான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *