100 பெண் கவிதாயிகளின் கவிதைகள் அடங்கிய நூல்.கவிதைகளை எதிர்பார்க்கும் தேசிய ஊடக கலை இலக்கிய ஒன்றியம்.

தேசிய ஊடக கலை இலக்கிய ஒன்றியத்தினால் பெண் கவிஞர்களின் கவிதைகளை உள்ளடக்கிய நூலொன்றை பிரசுரிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கமைய, தேசிய ரீதியில் கலை இலக்கியத் துறையில் கவிதை எழுதுவதில் ஈடுபட்டு வருகின்ற 100 பெண் கவிதாயிகளிடமிருந்து காத்திரமான கவிதைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் கவிதைகளில் தேர்வுக் குழுவினால் தெரிவு செய்யப்படும் நூறு கவிதைகள் இந்நூலில் பிரசுரிக்கப்படும்.
கவிதைகள் சொந்த ஆக்கமாக இருப்பதோடு, எழுத்தாளர் எழுத்து துறையில் ஆர்வத்தை வெளிக்காட்டியவராக இருத்தல் வேண்டும் , ஏ4 தாளில் ஒரு பக்கம் மாத்திரம் எழுதி அனுப்புதல் அல்லது 25 வரிகளுக்கு உட்பட்டு இருத்தல் வேண்டும், விரும்பிய தலைப்பில் கவிதையை படைக்க முடியும்.
மேற்படி நிபந்தனைகளுக்கு உட்பட்டு எழுதி அனுப்பும் கவிதைகளை, செயலாளர், தேசிய ஊடக கலை இலக்கிய ஒன்றியம், இல. 24, ஹாஜியார் வீதி, அட்டாளைச்சேனை 15 எனும் முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி வைப்பதுடன், அவ்வாறு அனுப்பும் கவிதைகளின் மென்பிரதியை 0772985024 எனும் whatsapp இலக்கத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேலும், கவிதையுடன் எழுத்தாளரின் சுய விபரங்கள் அடங்கிய, சுயமாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவம் ஒன்றை பூர்த்தி செய்து அனுப்புதல் வேண்டும்.
