உள்நாடு

அம்பாறை மாவட்ட உலமா சபை மற்றும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்திற்குமிடையிலான சந்திப்பும், மகஜர் கையளிப்பும்

முஸ்லிம் பெண் அரச உத்தியோகத்தர்களில் சீருடை கட்டாயமாக்கப்பட்ட பெண் அரச உத்தியோகத்தர்கள் அணியும் மதக் கடமைக்கான ஆடை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில் முஸ்லிம் பெண்கள் அணியும் ‘மறைப்பு ஆடை’ (தலை, கழுத்து, நெஞ்சுப் பகுதிகளை மறைக்கும் ஆடை)யை வரையறை செய்தல் மற்றும் தெளிவுபடுத்தலுக்கான வேண்டுகோள் அடங்கிய மகஜரை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ‘பத்வா’ குழுவிடம் அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா ஊடாக கையளிப்பதற்கான சந்திப்பு அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவுக்கும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்திற்குமிடையே
நேற்று பாலமுனை தானா அல்-புஷைரி ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது, முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டதுடன், மகஜர் தொடர்பில் சம்மேளனத்தின் தலைவர் மீரா எஸ். இஸ்ஸடீன் தெளிவுபடுத்தினார்.

கையளிக்கப்பட்ட மகஜரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிடம் கையளித்து, அவர்களுடன் இணைந்து இக்கோரிக்கை தொடர்பில் செயற்படவுள்ளதாக அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ஐ.எல்.எம். ஹாஷிம் சூரி தெரிவித்தார்.

இன் நிகழ்வில் அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமாவின் சார்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் ஐ.எல்.எம். ஹாஷிம் சூரி, செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.நாஸிர் கனி, பொருளாளர் அஷ்ஷெய்க் இஸட்.ஏ. நதீர், உபதலைவர்கள் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ஜவ்பர் மற்றும் அஷ்ஷெய்க் எப்.ஏ.எஸ்.எல். அன்சார் ஆகியோரும், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் சார்பில் அதன் தலைவர்.

இஸட்.ஏ. றஹ்மான்
(ஒலுவில் விசேட செய்தியாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *