சீனன் கோட்டையில் 94 ஆவது வருட புனித ஸஹீஹுல் புஹாரி தமாம் மஜ்லிஸ்

பேருவளை சீனன் கோட்டை பிட்டவளை அல்மிர்அதுஷ்ஷாதுலிய்யா ஸாவியாவில் 94 ஆவது வருட புனித ஸஹீஹ_ல் புஹாரி தமாம் மஜ்லிஸ் 13ம் (13.09.2026) திகதி ஞாயிற்றுக்கிழமை; ஷாதுலிய்யா தரீக்காவின் கலீபதுல் குலபா மௌலவி அல் ஹாஜ் எம்.இஸட் முஹம்மத் ஸுஹுர் (பாரி) யின் வழிகாட்டலின் கீழ் சீனன் கோட்டை பள்ளிச் சங்க இணைச் செயலாளரும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான கலீபதுஷ் ஷாதுலி அஷ் ஷெய்க் அல் ஹாஜ் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி) தலைமையில் நடைபெறுவதோடு கலீபதுஷ் ஷாதுலி மௌலவி எம்.எம். ஸைனுலாப்தீன் (பஹ்ஜி) அவருக்கு துணையாக இருப்பார். இதனை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.
முஹம்மத் ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது வரலாற்றுப் புகழ்மிக்க இறுதி ஹஜ்ஜின் (ஹஜ்ஜதுல் விதா) போது அங்கு குழுமியிருந்த அருமைத் தோழர்கள் மத்தியில் உரiயாற்றும் போது இதைச் சொன்னார்கள். “உங்களுக்காக நான் இரண்டை விட்டுச் செல்கின்றேன். அவற்றைப் பின்பற்றும் காலமெல்லாம் நீங்கள் வழி தவற மாட்டீர்கள்” இறைவேதமாம் அல் குர்ஆனும் அண்ணலாரது நடைமுறைகளாகிய சுன்னாவுமே அவையிரண்டுமாகும்.
அல்லாஹ்வின் வசனங்களடங்கிய அல் குர்ஆனை ஓதிப் பயன்பெறும் சந்தர்ப்பங்கள் புனித ரமழானில், முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் எல்லாம் கிடைக்கின்றன. ஆனால் அல்குர்ஆனுக்கு அடுத்த இடத்தில் வைத்துக் கணிப்பிடும், இஸ்லாமிய மூலாதாரங்கள் அடங்கிய ஹதீஸ்களை அறிந்து விளங்கிக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் மிக அரிதாகவே கிடைக்கின்றன.
இறைத்தூர் (ஸல்) அவர்கள்வாழ்ந்திருந்த காலத்தில் ஹதீஸ் விளக்கங்களை தொகுத்துப் பாதுகாக்க வேண்டும் என்ற உண்மை உணரப்படவில்லை. அண்ணலார் உயிரோடு இருந்த காரணத்தினால் அன்று மக்கள் மத்தியில் எழுந்த பிரச்சினைகளுக்கு அண்ணலாரே விளக்கமளித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களின் வபாத்துக்குப் பின்னர் ஹதீஸ்களின் முக்கியத்துவமும், மகோன்னதமும் உணரப்பட்டன. அல்குர்ஆனை நன்கு விளங்கிக் கொள்ளுவும் இஸ்லாமிய திட்டங்களை நன்கு விளங்கிக் கொள்ளவும் ஹதீஸ்கள் தேவைப்பட்டன. இதனால் காலக்கிரமத்தில் நபிகளாரின் பொன்மொழித் தொகுப்புக்கள் வெளிவர ஏதுவாயின. இவற்றுள் தலையாயதும், முக்கியம் வாய்ந்ததாகவும் கருதப்படுவது ‘ஸஹீஹல் புஹாரி’ என்னும் ஹதீஸ் பேழையாகும். அபூ அப்துல்லாஹ் முஹம்மதிப்னு இஸ்மாயில் புகாரி (ரஹ்) அவர்களால் தொகுக்கப்பட்ட மேற்படி நூல் அல் குர்ஆனுக்கு அடுத்தபடியாகச் சிரமேற்கொண்டு கருத்தப்பட்டுப் போற்றப்படுகின்றது. நபி (ஸல்) அவர்களின் வாய்வந்த இலட்சக்கணக்கான ஹதீஸ்களைத் தொகுத்து, 7275 ஹதீஸ்களை மட்டுமே இமாம் புஹாரி அவர்கள் தமது ஸஹீஹல் புஹாரியில் எழுதியுள்ளார். தாம் தொகுக்கும் ஒவ்வவொரு ஹதீஸ_ம் பிழையற்றதாக இருக்க வேண்டுமென்ற தூய எண்ணத்தினால் உந்தப்பட்டு ஒவ்வொரு ஹதீஸையும் எழுதுமுன்னர் இரண்டு ரகஅத்துக்களை தொழுது கொண்டார்கள்.
தாம் தொகுத்த புஹாரி ஷரீபில் எந்த ஹதீஸ் முதலாவதாக இடம்பெறவேண்டுமென்பதில் புகாரி இமாமுக்குப் பிரச்சினை எழுந்தது. மனிதன் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் அவனது எண்ணமே காரணம் என்ற உண்மை அவர்களது முயற்சிக்கு முதல் தூண்டியாக அமைந்தது. எனவே இமாம் அவர்களும் தமது நூலில், ‘ஒவ்வொரு செயலும் எண்ணத்தையே பொறுத்திருக்கிறது’ என்ற நபிகளாரின் ஹதீஸ் உடன் ஆரம்பம் செய்தார்கள்.
இவ்வளவு சிறப்புப் பொருந்திய இந்த அரிய புகாரி ஷரீபை மக்கள் சரிவரக் கேட்டு அதன்படி நடந்து மேம்பாடு அடைய வேண்டுமென்ற நோக்கில் இற்றைக்குச் சுமார் 94 ஆண்டுகளுக்கு முன்னர் பேருவளை சீனன் கோட்டை பிட்டவளையில் அமைந்துள்ள ‘அல் மிர்அதுஷ் ஷாதுலிய்யா’ ஸாவியாவில் ஓர் அரிய முயற்சி மேற் கொள்ளப்பட்டது. அதிராம் பட்டிணத்தில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த ஷாதுலிய்யாத் தரீக்காவின் கலீபதுல் குலபாவும், அத்தரீகத்துல் ரிபாயிய்யா நக்ஷபந்தியா தரீக்காவின் கலீபாவுமான அல் ஹாஜ் அஹமது லெப்பை ஆலிம் சாகிப் (ரஹ்) (சேகுனா அப்பா) அவர்கள் இந்த ஸாவியாவில் இந்த உயரிய புகாரி மஜ்லிஸை ஆரம்பித்து ஆன்மிக ஒளிதரும் மங்காத தீபத்தை ஏற்றி வைத்தார்கள். 1935 ஆண்டில் பிட்டவளையில் புகாரி மஜ்லிஸ் நடைபெறும் இந்த ஸாவியாவை ஸ்தாபித்து வரும் நமது சேகுனா அப்பா அவர்களேயாவார்.
இந்த மஜ்லிஸ் நபி (ஸல்) அவர்கள் பிறந்த ரபீயுல் அவ்வல் மாதத்தில் முப்பது தினங்களிலும் சுபஹ் தொழுகையின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. தலைசிறந்த உலமாப் பெருமக்களால் உபன்னியாசங்களும் விளக்கங்களும் அளிக்கப்படுகின்றன.
சேகுனா அப்பா அவர்கள் பேருவளை மாளிகாஹேனை புகாரி தைக்காவிலும் சிலகாலம் தங்கியிருந்து அங்கு நடைபெற்று வரும் மேற்படி மஜ்லிஸையும் முன்னின்று நடத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது. அன்னார் ஒரு தலை சிறந்த ஆலிமாகவும், ஒப்பற்ற இரத்தினக்கல் வியாபாரியாகவும் திகழ்ந்து இலங்கையின் எண் கோணங்களுக்கும் சென்று, மேன்மையான தீனுடைய பணியை மேற் கொண்டார். குறிப்பாக ஷாதுலிய்யா தரீக்காவின் வளர்ச்சிக்காக அயராது உழைத்து, மக்களையும் தீனின்பால் நெறிப்படுத்தினார்கள். ஷாதுலிய்யாக் கோட்டை என்று அன்றும் இன்றும் வர்ணிக்கப்பட்ட சீனன் மேகாட்டையில் சேகுனா அப்பா அவர்களின் ஆன்மீகப் பணிக்கு உதவியவர்களில் வர்த்தகரான மர்ஹ_ம் சீ.எம்.எச் ஸாலி ஹாஜியார் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். இதனாற்றன் சேகுனா அப்பா அவர்களை ஒரு சிறந்த கலீபதுல் குலபா என்றும் அவர் வாழ்ந்திருந்த காலகட்டத்தை பொற்காலம் என்றும் தற்கால மூத்த தலைவர்கள் அடைமொழி கூறுவதுண்டு. அல்ஹாஜ் அகமதுலெப்பை ஆலிம் சாகிப் அவர்கள் லௌகீகம், ஆன்மீகம் இரு துறைகளிலும் மேம்பட்டு விளங்கினார். வான சாஸ்திரத்திலும் அன்னார் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தார். உலகின் பல நாடுகளுக்கும் சென்று கல்வி கற்ற இப்பெரியார். ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற உயரிய நோக்கில் பணி|புரிந்தார். வெற்றி கண்டார்.
இப்பெரியாரது ஆன்மீகப் பணிக்கு மகுடம் வைத்தாற் போன்று அமைந்திருப்பது அதிராம் பட்டினத்தில் அன்னார் உருவாக்கிய ரஹ்மானியா மந்தரஸாவாகும். ரஹ்மானியா கலைக்கூடம் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வந்த மாணவர்களுக்கு அறிவுப் பாலூட்டி அவர்களைத் தலைசிறந்த உலமாக்களாக மாற்றியமை சான்றுடன் கூடிய உண்மையாகும். அன்னார் இயற்றிய ‘கிதாபுல் ஹஜ்’ என்னும் நூல் ஹஜ்ஜின் சிறப்பு பற்றி எடுத்தோதுகிறது.
இவ்வாறு ஆன்மீக ஓளியேற்றிய மகானின் சேவையைக் குறித்து ஏற்கனவே பிட்டவளைத் தர்கா வீதியை ‘சேகுனா அப்பா மாவத்த’ என்று தற்போது பெயரிட்டு பாதுகாத்து வருகின்றார். சீனன் கோட்டை வாழ் மக்கள்.
சீனன் கோட்டைப் பள்ளிவாசலில் அடங்கப்பட்டுள்ள மர்ஹூம்களான சாச்சப்பா ஆலிம் (ரஹ்) உதுமான் லெப்பை ஆலிம் (ரஹ்) அபூஸாலி ஆலிம் (ரஹ்) கலீபதுஷ் ஷாதுலி மௌலவி முஹம்மத் ஹனீபா ஆலிம் (ரஹ்) கலீபதுஷ் ஷாதுலி மௌலவி எம்.ஐ.எம். மன்ஸுர் ஆலிம் (ரஹ்) அவர்களைத் தொடர்ந்து பல உலமாக்கள் இம் மஜ்லிசின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்காற்றியதையும் நினைவு கூற வேண்டும். இன்று மர்ஹூம் கலீபதுஷ் ஷாதுலி மௌலவி முஹம்மத் ஹனீபா ஆலிம் (ரஹ்) அவர்களின் பேரப்பிள்ளையான கலீபதுஷ் ஷாதுலி அஷ் ஷெய்க் அல் ஹாஜ் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி) தலைமை தாங்குவது மகிழ்ச்சிக்குறியதாகும்.
அன்னார் என்ன நோக்கத்தோடு பிட்டவளையில் புகாரி மஜ்லிஸைத் தொடங்கி வைத்தார்களோ அந்த நோக்கு இன்று இன்று வரை சீனன் கோட்டைம க்களால் பேணிப் பாதுகாக்கப்பட்டு வற்துள்ளதை நாம் இங்கு மகிழ்வுடனும் திருப்தியுடனம் குறிப்பிட விரும்பிகிறோம். எதிர்காலத்திலும் இப்பணி அதொடர வல்ல நாயன் அருள் புரியட்டும்.
தமாம் நிகழ்வில் ஷாதுலிய்யா தரீக்காவின் கலீபதுல் குலபா மௌலவி அல் ஹாஜ் எம்.இஸட் முஹம்மத் ஸுஹுர் (பாரி) கலீபதுஷ் ஷாதுலி மௌலவி எம்.எம். ஸைனுலாப்தீன் (பஹ்ஜி) ஆகியோர் துஆப் பிராத்தனை நடாத்துவர். கலீபதுஷ் ஷாதுலி அஷ் ஷெய்க் அல் ஹாஜ் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி) விசேட சொற்பொழிவாற்றுவார்.
புனித ரபியுல் அவ்வல் மாதம் 30 தினங்களாக சீனன் கோட்டைப் பகுதியில் நடைபெற்றுவந்த மௌலுத் மஜ்லிஸ் தமாம் வைபமும் 12.09.2026 ம் திகதி மாலை அஸர் தொழுகையையடுத்து இதே சாவியாவில் நடைபெறும். மஃரிப் தொழுகையை தொடர்ந்து வலீபா யாக்கூத்தியாவும் இஷாத் தொழுகையை தொடர்ந்து வலீபா ஹாக்கூத்தியாவும் இஷாத் தொழுகையை அடுத்து திக்ர் மஜ்லிசும் முஸாக்கராவும் இடம் பெறும். பேருவளை மருதனை மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசல் கதீப் மௌலவி பைஸல் காமில் (ஸக்காபி) விசேட சொற்பொழிவாற்றுவார்.
சங்கைமிகு ஸாதாத்மார்கள், சேஷ்மார்கள், கலீபாக்கள், உலமாக்கள் சீனன் கோட்டை பள்ளிசங்கத் தலைவர் ஏ.எச்.எம் முக்தார் ஹாஜியார் உட்பட உறுப்பினர்கள், அல் மிர்அதுஷ் ஷாதுலிய்யா ஸாவியா நிர்வாகிகள், கலீபதுஷ் ஷாதுலிகளான மௌலவி எம்.ஐ.எம் ரபீக் (பஹ்ஜி) மௌலவி எம்.ஜே.எம் பஸ்லான் (அஷ்ரபி – புP.ஏ) ரயீஸூ முகத்தமுஸ் ஷாதுலி மௌலவி எம்.டப்லியு.எம் பஹ்ருத்தீன் (மிஸ்பாஹி)மேற்படி ஸாவியாவின் இமாம்களான மௌலவி முஹம்மத் ஹாதிக் (பஹ்ஜி),மௌலவி முஹம்மத் ஷஹான் (அஷ் ஷாதுலி) சீனன் கோட்டடை பள்ளிவாசல்கள் மற்றும் ஸாவியாக்களின் இமாம்கள், சீனன் கோட்டை ஜாமியதுல் பாஸியதுஷ் ஷாதுலி கலாபீட விரிவுரையாளர்கள், மாணவர்கள் உட்பட ஊர் ஜமாஅத்தார்கள் நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த இஸ்லாமியர்கள் இம்மஜ்லிஸில் பங்குபற்றுவர்.
இந்த மஜ்லிஸ் சிறப்புற நிறைவுசெய்ய நமது ஒத்துழைப்பினை நல்குவோமாக. எமது நாட்டங்கள் நிறைவேறவும் எமது தாய்த் திருநாட்டில் சாந்தியும் சமாதானமும் நிலவவும் இந்த மஜ்லிஸில் பங்குபற்றிப் பிராத்திப்போமாக…
பேருவளை பீ.எம் முக்தார்
