உள்நாடு

தெஹிவளை குண்டுத் தாக்குதல்.இரு சிறுவர்கள் பலி.விசாரணைகளுக்கு மூன்று பொலிஸ் குழுக்கள்.

தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிரி சங்க போ பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது இன்று வெள்ளிக்கிழமை (11) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அதிகாலை இடம்பெற்ற இத்தாக்குதலில் காயமடைந்த 55 வயதுடைய நபர் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இரு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.

இனந்தெரியாத நபர் ஒருவரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர்கள் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை என  பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளில் ஈடுப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *