இலங்கையில் தயாரிக்கப்பட்ட அதி நவீன படகு வெளிநாட்டிற்கு ஏற்றுமதி!

நீரிலும் நிலத்திலும் ஒரே நேரத்தில் இயங்கக்கூடிய உயர் தொழில்நுட்ப இரு வழியும் இயங்கும் (Amphibious) படகு, முதன் முறையாக இலங்கையிலிருந்து ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
கொக்கலை சுதந்திர வர்த்தக வலயத்தில் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
ஓஷன் வோயேஜர் இன்டர்நேஷனல் (Ocean Voyager International) நிறுவனத்தால் உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த நவீன படகு, நாட்டின் கடல்சார் உற்பத்தித் துறைக்கும் ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்கும் பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
( ஐ. ஏ. காதிர் கான் )
