உள்நாடு

இடைக்கிடை மழை செய்யலாம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் ஒருசில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இதேவேளை புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பகுதிகளில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும். 

காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். 

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு (50-60) கி.மீ வரை அதிகரிக்கக்கூடும். 

சிலாபத்திலிருந்து மன்னார் ஊடாக கங்கேசன்துறை வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும். 

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன் சிலாபத்திலிருந்து மன்னார் ஊடாக கங்கேசன்துறை வரையான கடற்பகுதிகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். 

சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் கடல் அலையானது சுமார் (2.0 – 2.5) மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *