தேசிய நேர்மை விருதுகள் – 2026

- உத்தியோகபூர்வ இலச்சினை வடிவமைப்புப் போட்டி
ஊழலற்ற நேர்மையான அரச சேவையை உருவாக்கப் பங்களிக்கும் “தேசிய நேர்மை விருதுகள் – 2026” க்கான உத்தியோகபூர்வ இலச்சினையை (Logo) வடிவமைக்கும் அரிய வாய்ப்பில் பங்கேற்குமாறு, ஜனாதிபதி செயலக நேர்மை மேம்படுத்தும் பணியகம் இலங்கைப் பிரஜைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதன்படி, வெற்றிபெறும் படைப்புக்கு, ரூ. 75,000.00 பணப் பரிசும் சான்றிதழும் வழங்கப்படும் என, பணியகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டி விதிமுறைகள் மற்றும் மேலதிக விபரங்களுக்கு, சுவரொட்டியில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் பண்ணுமாறும், ஜனாதிபதி செயலக நேர்மை மேம்படுத்தும் பணியகம் இலங்கைப் பிரஜைகளை வேண்டியுள்ளது.
( ஐ. ஏ. காதிர் கான் )
