குட்டி மலை ஸாவியாவில் மனாகிப் மஜ்லிஸ்.

வரலாற்று பிரசித்தி பெற்ற பேருவளை சீனன் கோட்டை குட்டிமலை ஜலாலிய்யா ஸாவியா ஜும்ஆ பள்ளிவாசலில் வருடாந்தம் நடைபெறும் காதிரிய்யா மனாகிப் மஜ்லிஸின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 13ம் திகதி (13.09.2026) ஞாயிற்றுக் கிழமை அஸர் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெறும்.
அகில் இலங்கை ஜமியத்துல் உலமா சபை நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் சீனன்கோட்டை பள்ளிச் சங்க இணைச் செயலாலருமான கலீபதுஷ்ஷாதுலி அஷ்ஷெய்க் அல்ஹாஜ் ஏ.எச். இஹ்ஸானுதீன் அபுல் ஹஸன் (நளீமி) நிகழ்வுக்கு தலைமை வகிப்பார்.
காதிரிய்யா தரீக்காவின் ஸ்தாபகர் அல்குத்புல் அக்தாப் கௌதுல் அஹ்லம் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (றழி) அவர்களின் ஜனன தினத்தை முன்னிட்டு இம் மஜ்லிஸ் இடம்பெறுகிறது.
தொடர்ந்து 09 நாட்கள் காதிரிய்யா மனாகிப் மஜ்லிஸ் ஓதப்பட்டு எதிர்வரும் 22ம் திகதி செவ்வாய்க் கிழமை மாலை தமாம் பெரிய கந்தூரியுடன் நிறைவு பெறும். 21ம் திகதி இரவு திக்ர் மஜ்லிஸும், புனித அல்குர்ஆன் தமாமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமாம் நிகழ்வில் ஐதுரூஸியதுல் காதிரிய்யா தரீக்காவின் கலீபாவும் பிரபல உலவியலாளருமான அல்ஹாபிழ் மௌலவி எம்.ஸீ.எம். முஸ்தகீம் (நஜாஹி) விஷேட சொற்பொழிவாற்றுவார்.
மேற்படி ஸாவியாவின் இமாம்களான மௌலவி முகத்தமுஷ்ஷாதுலி எம்.டப்.எம். பஹ்ருத்தீன் (மிஸ்பாஹி), மௌலவி எம். இக்ராம் (நுலாரி), ஹாபிஸ் முஹம்மத் இல்ஹாம் ஆகியோர் தினமும் நடைபெறும் மனாகிப் நிகழ்வுக்கு தலைமை வகிப்பர்.
ஆரம்ப நிகழ்வில் கலீபாக்கள், சீனன்கோட்டை பள்ளிச் சங்க உறுப்பினர்கள், மேற்படி தர்கா ஸாவியா மஸ்ஜிதின் நிர்வாகிகள், இஹ்வான்கள் என பலரும் கலந்து கொள்வர்.
பேருவளை பீ.எம். முக்தார்
