உள்நாடு

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் கல்வி அமைச்சில் இடம்பெற்ற மீலாதுன் நபி விழா

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “மீலாதுன் நபி விழா – 2026” (07) திங்கட்கிழமை அமைச்சில் சிறப்புற நடந்தேறியது.

நிகழ்வில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே, பேராதனைப் பல்கலைக்கழக கலைப் பீடத்தின் அரபு மற்றும் இஸ்லாமிய நாகரீகத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.எம்.எம். தமீம், அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவின் பிரதானி மேஜர் என்.டி. நஸுமுத்தீன் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *