இளம் அரச ஊடகவியலாளர்கள் தெரிவில் ஒலுவிலைச் சேர்ந்த இம்தாத் ஹுசைன் தெரிவு
அகில இலங்கை ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 341 அரச இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில், ஒலுவில் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் ஊடகவியலாளராக இசட். இம்தாத் ஹுசைன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால், பிராந்திய இளம் ஊடகவியலாளர்களின் ஊடக மற்றும் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 341 இளம் ஊடகவியலாளர்களுக்கான ஊடக மற்றும் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந் நிகழ்வு நேற்று 4ம் திகதி கொழும்பு, மகரகமவில் நடைபெற்றது.
இதன்போது பயிற்சியில் பங்கேற்ற தெரிவு செய்யப்பட்ட இளம் ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




