உள்நாடு

பொய்களை அள்ளிக்கொட்டி அதிகாரத்தைப் பெற்ற பின் நாடெங்கும் கூட்டங்களை நடாத்தி மீண்டும் பொய்களை விதைக்க ஜனாதிபதி முயற்சி; சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

கடந்த மூன்று தேர்தல்களுக்கு முன்பும், தற்போதைய ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் அமைச்சர்கள் வயல்வெளிகளுக்குச் சென்று நெற்கதிர்களை கடித்துக் கொண்டு, ஒரு கிலோ நெல்லுக்கு உத்தரவாத விலையாக 150 ரூபாவை சட்டமாக்கித் தருவோம் என்று பிரஸ்தாபித்தனர். ஆனால் இன்று அது நடக்கவில்லை. ஒரு கிலோ நெல்லுக்கு 120 ரூபா என்ற விலையே தற்சமயம் வழங்கப்பட்டுள்ளது. விவசாயத்துறை அமைச்சர் பாராளுமன்றத்திற்கு வந்து ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்வதற்கு 137 ரூபா செலவாகின்றது என தெரிவித்தார். இதன் பிரகாரம் விவசாயியின் ஒரு கிலோ நெல்லுக்கு 17 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

விவசாயிகளிடம் பொய் சொல்லி வாக்குகளைப் பெற்று, ஜனாதிபதிப் பதவிகள், பிரதமர் பதவிகள் மற்றும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொண்டு, இன்று விவசாயிக்கு நட்டத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இப்போது அதற்கும் மேலாக நெல்லைக் கொள்வனவு செய்வதாகக் கூறினாலும் இன்னும் நெற்களஞ்சியங்களுக்கு நெல் கொள்வனவு செய்யப்படவில்லை. தற்சமயம் ஈர நெல் கிலோ ஒன்று 85 ரூபா என்ற விலைக்கும், காய்ந்த நெல் கிலோ ஒன்று 100 ரூபா போன்ற விலைக்குமே அரசாங்கம் கொள்வனவு செய்து வருகின்றது. வெறும் 2 முதல் 3 சதவீதம் அளவே அரசாங்கம் கொள்வனவு செய்து வருகின்றது. எஞ்சிய நெல்லைக் கொள்வனவு செய்யும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலைகள் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளன. எதிர்க்கட்சியின் வலியுறுத்தலின் பேரில் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலைகளுக்கு 75 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு, வட்டியில்லா கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை, லுணுகம்வெஹர சீனி முன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராயும் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த வேளை நிர்மாணித்த நெல் களஞ்சியசாலையையும் நேரில் சென்று பார்வையிட்டார்.

தங்க நகைகளை அடகு வைத்து விதை நெல்லைப் பெற்று, உர மானியம் கூட உரிய காலத்தில் கிடைக்காத சந்தர்ப்பத்தில் விவசாயம் செய்து, விவசாய உபகரணங்களுக்கு கூட வெட் வரி விதிக்கப்பட்ட ஒரு வேளையில், காட்டு யானை – மனித மோதல்களுக்கு மத்தியிலும் நெல் பயிரிட்டாலும், இன்று ஒவ்வொரு கிலோ நெல்லிலும் 17 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

🟩 இரண்டு ஆண்டுகளில் 380,000 மெட்ரிக் டொன் அரிசி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்வது கொமிஸ் அடிப்பதற்காகவே என்றும், கொமிஸ் அடிக்க வேண்டும் என்பதற்காகவே வெளிநாடுகளிலிருந்து அரிசியைக் கொண்டுவந்து விவசாயியை அழிப்பதாக விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்திருந்தார். அன்று ஜனாதிபதி கூட வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்வது குறித்து 3 இலட்சம் மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்ய 900 கோடி ரூபா இலஞ்சம் பெற்றுள்ளனர் என கூறியிருந்தார். ஆனால் தற்போதைய அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்குள் 380,000 மெட்ரிக் டொன் அரிசியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

🟩 அரிசி மேலதிக கையிருப்பு காணப்படும் நிலையில், ஏன் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டும்?

நமது நாட்டின் தற்போதைய அரிசித் தேவை 25 இலட்சம் மெட்ரிக் டொன்னாக காணப்பட்டாலும், நாட்டில் ஆண்டுதோறும் 32 இலட்சம் மெட்ரிக் டொன் அரிசி உற்பத்தி செய்யப்படுகின்றது. தேவையை விட அரிசி உற்பத்தி அதிகமாகி அரிசி மேலதிக கையிருப்பில் காணப்படுகின்றன. நாட்டில் தேவைக்கு அதிகமாக அரிசி காணப்படும் நிலையில் அரசாங்கம் ஏன் வெளிநாடுகளிலிருந்து அரிசியைக் கொண்டுவருகிறது என்ற கேள்வி எழுகின்றது. இதற்கு நமது நாட்டிற்கு தேசிய விவசாயத் திட்டமும் பொறிமுறையும் இல்லாமைதான் காரணமாகும். அரிசித் தேவையில் 76% வெள்ளை மற்றும் சிவப்பு நாடு அரிசியும், 12% சம்பாவும், மீதமுள்ள 12% கீரி சம்பாவும் உட்கொள்ளப்படுவதால், விஞ்ஞான ரீதியாக நாட்டின் பயிர்செய்கை முறை உருவாக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 நடமாடும் நூலகங்களின் வேலைகள் இப்போது மக்களுக்குப் புரிந்துவிட்டன

வெளிநாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வதில் பிரச்சினை காணப்படுகின்றன. இந்தப் பாரிய பிரச்சினைக்கு அநுர குமார திஸாநாயக்க அரசாங்கத்திடம் தீர்வு இல்லை.’நடமாடும் நூலகங்கள்’ என்று கூறி நாட்டின் பெரும்பான்மையினர் இந்த அரசாத்திற்கு வாக்களித்தாலும், இந்த அரசாங்கத்திற்கு குறைந்தபட்சம் மக்களின் துயரம் கூடப் புரியவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

🟩 17,315 ரூபாயை வைத்து ஒரு மாதம் வாழ முடியுமா?

விவசாய அமைச்சர் லால்காந்தவின் கூற்றுப்படி, ஒரு கிலோ சிவப்பு நாடு அரிசியை உற்பத்தி செய்ய 76 ரூபா செலவாகின்றது. ஒரு ஏக்கர் சிவப்பு நாடு மூலம் 2315 கிலோ கிடைக்கின்றன. அதற்கமைய செலவு 175,940 ரூபாயாகும்போது, இந்த முழு அறுவடையையும் அரசாங்கம் 120 ரூபா வீதமே கொள்வனவு செய்வதால், விவசாயிக்கு வருமானமாக 277,080 ரூபாவே கிடைக்கும். இதன் பிரகாரம் நிகர இலாபம் சுமார் 100,000 ரூபாயாக இருக்கும் வேளை, மாதமொன்றுக்கு விவசாயிக்கு கிடைப்பது 16,666 ரூபாயாகும். இதனுடன், தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின்படி ஒரு நபர் 30 நாட்கள் வாழ்வதற்கு 17,315 ரூபா செலவாகின்றன. இந்தத் தொகை ஒரு நபருக்குப் போதுமானதா என்ற கேள்வி எழுகின்றது என்று அவர் தெரிவித்தார்.

🟩 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளிலும் மக்கள் ஏமாற்றப்பட்டனர்

இலட்சக் கணக்கில் அரசாங்கத்திற்கு வாக்களித்துவிட்டு 16,666 ரூபாயைக் கொண்டு வாழ்வது போதுமானதா என விவசாயிகளிடம் கேள்வி எழுப்புகிறேன். இந்த அரசாங்கம் விவசாயிகளை ஏமாற்றி முட்டாளாக்கியுள்ளது. 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளிலும் நாட்டின் மக்கள் ஏமாற்றப்பட்டனர். பொய் அரசியல் மட்டுமே இவர்களுக்குத் தெரியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 மீண்டும் பொய்களை சொல்லவே ஜனாதிபதி நாடெங்கிலும் சென்று கூட்டம் நடத்துகிறார்

இந்தப் பயங்கரமான பொருளாதார நெருக்கடியால் நாட்டிலுள்ள 30-40% ஆன மக்கள் வறுமைக்கோட்டிற்குள் தள்ளப்பட்டுள்ளனர். ‘அஸ்வெசும’ உதவித் திட்டம் வெட்டப்பட்டு வருகின்றது. இவற்றுக்கு மத்தியில் ஜனாதிபதி மக்களைச் சந்திப்பதற்காகக் கூட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளார். இந்தக் கூட்டங்களுக்கு செல்வதற்கு முன்பு 33% ஆல் மின்சாரக் கட்டணத்தைக் குறைத்து, துறைமுகத்தில் இறக்கப்படும் விலையிலேயே எரிபொருளை வழங்கி, 12 இலட்சத்திற்கு விட்ஸ் (Vitz) ரக காரை பெற்றுக் கொடுங்கள். இவ்வாறு கொடுத்து விட்டு மக்கள் மத்தியில் செல்லுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 ஏன் தொடர்ந்து மக்களுக்குப் பொய் சொல்கிறீர்கள்?

நிலப் பயிர்கள், வெங்காயம், உருளைக்கிழங்கு விவசாயிகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களுக்கும் நிலைநாட்டுவோம் எனக் கூறிய நீதியை நிறைவேற்றிக் கொடுங்கள், திறைசேரியில் டொன் கணக்கில் பணம் கையிருப்பில் காணப்படுகின்றது என கூறினர். ஆகவே இப்போதாவது இந்த மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுங்கள். இனியாவது மக்களுக்குப் பொய் சொல்லாமல் வளமான நாட்டையும், அழகான வாழ்க்கையையும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

🟩 அன்று நான் சொன்னதை பார்த்துச் சிரித்தவர்கள், இன்று அனைத்தும் உண்மையாகிவிட்டன

கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் பல விடயங்களை முன்வைத்து பேசினேன். அரசாங்கம் என்னைப் பார்த்து சிரித்தது. பெண்களின் சுகாதாரப் பிரச்சினையான மாதவிடாய் வறுமை பற்றி நான் பேசிய வேளை என்னைப் பார்த்து ஏளனம் செய்தனர். ஆனால் இன்று அதுவே தேசியக் கொள்கையாக மாறிப் பாடசாலை செல்லும் பத்து இலட்சம் சிறுமிகளுக்கு 14.7 கோடி ரூபா (ரூ. 1400 மில்லியன்) ஒதுக்கப்பட்டு இந்த நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. நான் ஆட்சிக்கு வந்திருந்தால் அதனை தேசியக் கொள்கையாக மாற்றியிருப்பேன் எனத் தெரிவித்தார்.

🟩 எல் நினோ (El Nino), லா நினோ (La Nina) தாக்கத்தை நாம் வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும்

கொரோனா காலத்தில் முகக்கவசங்கள் பற்றிக் கூறினேன். அப்போதும் கூட என்னைப் பார்த்து ஏளனம் செய்தனர். தடுப்பூசிகள் பற்றிக் கூறிய சமயத்தில் என்னை கேலி செய்து கொண்டு ‘தம்மிக பானம்’ தயாரித்து கேலி செய்துகொண்டிருந்தனர். எதிர்காலத்தில் எல் நினோ, லா நினோ போன்ற காலநிலை மாற்றங்கள் பெருமளவில் ஏற்படக்கூடும் எனவும், இந்த எல் நினோ காரணமாக பல மாவட்டங்களில் வறட்சி ஏற்படும் என்றும், லா நினோ தாக்கம் மூலம் அதிக மழை பெய்து வெள்ளப்பெருக்கு கூட ஏற்படலாம் என்றும் நான் ஏலவே கூறினேன். இதற்கும் சமூக ஊடகங்கள் வாயிலாக சேறு பூசினர். ஆனால் நாம் இன்று எதற்கு முகம்கொடுத்து வருகிறோம். எனவே, இதைவிட ஒழுங்கான திறமையான அனர்த்த முகாமைத்துவ வேலைத்திட்டமொன்று நாட்டிற்கு அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

https://we.tl/t-sff5cH40Fc32auLS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *