உள்நாடு

கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி நிஜாம் நூரி இந்தியா பயணம்

விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் இணையும் கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் கற்கும் மாணவி செல்வி முஹம்மத் நிஜாம் நூரி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று (27 ) இந்தியா நாட்டுக்கு பயணமானார்.

உலகளாவிய ரீதியில் முதல் முறையாக பெண் மாணவிகள் இணைந்து விண்கலமொன்றை விண்வெளிக்கு பரீட்சார்த்தமாக அனுப்பும் முயற்சியின் ஒரு கட்டமாக, Mission ShakthiSAT – Phase II (India Programme) எனும் சர்வதேச STEM தலைமைத்துவம், விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் செயற்கைக்கோள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் விசேட பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் உலகளாவிய ரீதியில் 108 நாடுகளைச் சேர்ந்த 14 முதல் 18 வயதுக்குட்பட்ட சுமார் 200 பெண் மாணவிகள் பங்கேற்கின்றனர். தெரிவுசெய்யப்பட்ட மாணவிகள் இந்தியாவில் தங்கியிருந்து குறித்த பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்வதுடன், விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் செயற்கைக்கோள் தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொள்ளவுள்ளனர்.

மேலும், இம்மாணவிகள் இந்திய ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களைச் சந்திக்கும் வாய்ப்பையும் பெறவுள்ளனர்.

இந்நிலையில், இலங்கையின் முன்னணி பாடசாலைகளில் இருந்து 20 மாணவிகள் இத்திட்டத்திற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் இருந்து மாணவி செல்வி முஹம்மத் நிஜாம் நூரி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவர் கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்று, தற்போது உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்று வருகின்றார்.

(எம்.ஏ.முகமட்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *