உள்நாடு

மீலாதுன் நபி விழா – மூர் லெஜெண்ட் பவுண்டேஷன் ஏற்பாடு

களுத்துறை தெற்கு, மூர் லெஜெண்ட் பவுண்டேஷன் ஏற்பாட்டில் மீலாதுன் நபி விழா நாளை 26ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

அண்ணல் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் பிறப்பு மற்றும் உயரிய வாழ்வியல் போதனைகளை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவில், நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் சிறப்புகள் மற்றும் வாழ்க்கை நெறிகள் தொடர்பான சிறப்புரை, கஸீதா, இஸ்லாமிய கீதம் மற்றும் ஹதீஸ் நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

இவ்விழாவின் முக்கியமான சமூகநல ஏற்பாடாக, தெரிவுசெய்யப்பட்ட 100 சிறார்களுக்கு பரிசுப் பொதிகள் வழங்கப்படவுள்ளதுடன், நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளன.

சமூக ஒற்றுமை, மனிதநேயம், அன்பு மற்றும் பிறருக்கு உதவும் உயரிய பண்புகளை ஊக்குவிக்கும் வகையில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பிரதேச மக்களையும் நலன் விரும்பிகளையும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மூர் லெஜெண்ட் பவுண்டேஷன் அன்புடன் அழைக்கிறது

(பேருவலை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *