உள்நாடு

அத்தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யாவின் ஏற்பாட்டில் வெலிகமையில் மாபெரும் மீலாதுன்னபி பெருவிழா

கண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை கௌரவிக்கும் முகமாக வழமைபோல் 21 ஆம் ஆண்டாக இம்முறையும் பன்னாட்டு மக்கள் பக்தியுடன் சங்கமிக்க, அத்தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யாவின் ஏற்பாட்டில் பைத்துல் பராக்காஹ் இல, 52 புஹாரி மஸ்ஜித் மாவத்தை, கல்பொக்கை வெலிகமையில் நாளை 26, நாளை மறுநாள் 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது.

நபிகள் நாயகம் அவர்களின் 34ஆம் தலைமுறைப் பேரர், சங்கைக்குரிய
ஜமாலிய்யா அஸ்ஸெய்யித் கலீல் அவ்ன் மௌலானா அல் ஹாஷிமிய் (வாப்பா நாயகம்) கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அழீம் அவர்களின் அருமைப் பேரர், அத்தரீகத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யாவின் ஆத்மிகத் தலைவர் சங்கைக்குரிய அஷ்ஷைகுல் காமில், குதுபுல் இலாஹி கௌதுல் வுஜுதி, ஜமாலிய்யா அஸ்ஸெய்யித் யாஸீன் அலி மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் B.E., M.B.A., அவர்கள் நிகழ்வில் தலைமை வகிப்பார்.

மிகச்சிறப்பாகவும்
விமர்சையாக நடைபெறவிருக்கும் மாபெரும் மீலாதுன்னபி ﷺ பெருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளாக, நாளை 26ஆம் திகதி புதன்கிழமை காலை 10:00 மணிக்கு யாஸீன் மௌலானா மௌலித், அஸர் தொழுகையின் பின் புர்தா ஷரீப் மற்றும் ஃபரீததுன் நளரிய்யா ஃபீ தக்மீஸி கஸீததின்(ம்) முளரிய்யா மஜ்லிஸும், மஃரிப் தொழுகையின் பின் ரஸுல்மாலை மஜ்லிஸ் நடைபெறும்.

நாளை மறுநாள் 27ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை ஸுபுஹான மவ்லிது மஜ்லிஸ் நடைபெறும், இம்மஜ்லிஸ் நிகழ்வு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தென்றல் FM 104.7, FM 104.9 மற்றும்
www.slbc.lk ஆகிய அலைவரிசையூடாக
நேரடி அஞ்சல் செய்யப்படும்.

நாளை மறுநாள் மாலை மஃரிப் தொழுகையின் பின் இராத்திபதுல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யயா மஜ்லிஸ் நடைபெறும்.

மற்றும் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8:30மணிமுதல் இரவு 8:45 மணிவரை மீலாதுன்னபி பெருவிழா விசேட நிகழ்ச்சிகள் விமரிசையாக நடைபெறும்.

நிகழ்ச்சிகள் அனைத்தையும்
EMS Media YouTube தளத்தினூடாக நேரலை செய்யப்படும்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *