அடுத்த ஆண்டுக்கான பொதுப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு
2027ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள முக்கியப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட ஊடக அறிக்கையில், தரம் 5ற்கான புலமைப்பரிசில் பரீட்சை 2027 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 1 ஆம் திகதி நடைபெறும்.
க.பொ.த உயர்தர பரீட்சை (A/L) 2027ஆம் ஆண்டு ஓகஸ்ட் 3 முதல் ஓகஸ்ட் 28 வரை நடைபெற உள்ளது.
பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சை 2027 ஆம் ஆண்டு ஒக்டோபர் 24 ஆம் திகதி நடத்தப்படும்.
இதற்கிடையில், க.பொ.த சாதாரண பரீட்சை (O/L) 2027 டிசம்பர் 7 முதல் டிசம்பர் 17 வரை நடைபெறும்.
பரீட்சை திகதிகளைத் பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அறிவித்தார்.
அறிவிக்கப்பட்ட திகதிகளை குறித்துக்கொண்டு, பரீட்சைகளுக்குத் தேவையான தயாரிப்புகளைச் செய்யுமாறு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலைகளுக்கும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
