உள்நாடு

சோனக இஸ்லாமிய கலாச்சார நிலையம் (MICH) நடாத்தும் 73 வது மீலாதுன் நபி போட்டி 2026

கொழும்பு சோனக இஸ்லாமிய கலாச்சார நிலையத்தின் (MICH) தஃவா மற்றும் மத விவகாரக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 73 வது மீலாதுன் நபி போட்டி நிகழ்வுகள் வழமைபோன்று இம்முறையும் மிக சிறப்பாக இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பங்கேற்குமாறு பாடசாலைகள் மற்றும் கல்வி நிலையங்கள் ஊடாக மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறப்பை நினைவு கூரும் வகையில் இந்த வருடாந்த நிகழ்வு நடத்தப்படுகிறது.

இதில் ஹிப்ழ் (குர்ஆன் மனனப் போட்டி), அரபு எழுத்தணி (Calligraphy), மல்டி மீடியா விளக்கக்காட்சிகள் மற்றும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பேச்சுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இலங்கை முழுவதும் உள்ள மாணவர்கள் இதில் பங்கேற்கலாம். போட்டிகளுக்கான விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகள் விண்ணப்பதாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2026 செப்டம்பர் 25, வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.30 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

விண்ணப்பங்களை தலைவர்,
தஃவா மற்றும் மத விவகாரக் குழு,
சோனக இஸ்லாமிய கலாச்சார நிலையம் (MICH),
5வது மாடி, இல : 27,
சேர் ராசிக் பரீத் மாவத்தை,
கோட்டை, கொழும்பு 01 எனும் முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்பி வைக்குமாறு தஃவா மற்றும் மத விவகாரக் குழுவின் தலைவர் சித்தீக் முஹம்மது ஷாஸ்லி தெரிவித்துள்ளார்.

இந்த உன்னதமான முயற்சியில் கல்வி நிறுவனங்கள் பங்கேற்று, இச்சிறப்பான நிகழ்வில்
மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பளிக்குமாறும் அவர் மேலும் வேண்டிக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் அல்லது விளக்கங்களுக்கு, தலைவர் அவர்களை 0773578986 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.

(எம்.யூ.எம்.சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *