உள்நாடு

கஹட்டோவிட்டவில் வெற்றிகரமாக நிறைவுற்ற கண் பரிசோதனையும் மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வும்

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த மாதத்தை முன்னிட்டு கடந்த 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கஹட்டோவிட்ட திவானி மண்டபத்தில் மேற்படி இலவச கண்பரிசோதனை முகாமும் வைத்தியரால் பரிந்துரை செய்தோருக்கு மூக்கு கண்ணாடியும் அதே இடத்தில் வழங்கப்பட்டது.

காதிரிய்யதுன் நபவிய்யா தரீக்காவின் செய்கு நாயகம் கண்ணியத்துக்குரிய அஷ்ஷெய்கு அஹ்மத் இப்னு முஹம்மத் ஹபிழஹுல்லாஹ் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற மேற்படி கண்பரிசோதனை முகாமில் 815 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இதற்காக பதிவு செய்த எண்ணிக்கை 900 இனை விட அதிகம் என்பதோடு இவர்களுள் 650 இற்கு மேற்பட்டோருக்கு மூக்கு கண்ணாடி இலவசமாக வழங்கியமை விசேட அம்சமாகும்.

கஹட்டோவிட்ட, குரவலான,ஓகடபொள, திஹாரி,உடுகொடை, வல்கம்முலை, போகொட மற்றும் சூழவுள்ள முஸ்லிம் மற்றும் முஸ்லிம்கள் அல்லாத சகோதரர்கள் அதிகமாக வாழும் ஊர்களில் இருந்து இந்த முகாமில் கலந்து பயனடைந்தனர்.

இன மத பேதமோ , வர்க்க பேதங்களோ, ஆண்பெண் வேறுபாடோ , வயது வேறுபாடோ மற்றும் எந்த வேறுபாடுளுக்கப்பால் நடைபெற்ற இந்த மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் வெற்றிகரமாக நிறைவேறியது.

பைக்கா மற்றும் ஹம்தூன் நிதியத்தின் ஏற்பாட்டில் கஹட்டோவிட்ட நபவியாயா இஸ்லாமிய அமைப்பின் ஒருங்கிணைப்போடு நடைபெற்ற இந்த முகாமின் ஏற்பாடுகளை கஹட்டோவிட்ட நபவிய்யா இஸ்லாமிய அமைப்பு நேர்த்தியாகவும், சிறப்பாகவும் முன்னெடுத்திருந்தமை சிறப்பம்சமாகும்.

கஹட்டோவிட்ட மற்றும் ஓகடபொள கிராம் சேவகர்களின் ஒத்துழைப்போடு அவசியமான மக்களுக்கு இன மத பேதம் பாராது இச்சேவையை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த சேவையால் பயனைந்த பல்வேறு தரப்பினரும் , மக்களும் இந்த சேவையை ஏற்பாடு செய்தவர்களுக்கும் கஹட்டோவிட்ட நபவிய்யா இஸ்லாமிய அமைப்புக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு இந்த சேவைக்காகவும் இதேபோன்ற இன்னும் பல சேவைகள் புரிவதற்கும் வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *