உள்நாடு

கொழும்பில் கொண்டாடப்பட்ட பாகிஸ்தான் சுதந்திர தினம்

இலங்கையில் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர் ஸ்தானிகராலயம் மற்றும் அங்குள்ள பாகிஸ்தான் சமூகம் ஆகியவை, இணைந்து பாகிஸ்தான் 79-வது சுதந்திர தினத்தை வெள்ளிக்கிழமை 14 உயர்ஸ்தானிக ஆலயத்தில் கொண்டாடினார்கள்

இந்நிகழ்வுக்கு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) டாக்டர் நய்யார் நசீர் (HI (M)) அவர்கள் தேசியக் கொடி ஏற்றப்பட்டது தேசிய கீதம் இசைக்கப்பட்டது தொடங்கியது; அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் விசேட செய்திகள் வாசிக்கப்பட்டன

தனது சிறப்புரையில், உயர்ஸ்தானிகர் கலாநிதி நய்யார் நசீர்,

இலங்கை பாக்கிஸ்தான் உறவில் பொருளாதாரம், விளையாட்டு, பாதுக மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் கடந்த எட்டு தசாப்தங்களாக நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தான் அடைந்த மீள்திறன், நம்பிக்கை மற்றும் முன்னேற்றத்தை நினைவுகூர்ந்து, தேசத்தந்தை கட்டியெழுப்பிய முன்னாள் தலைவர்கள் காயிதே-அஸாம் முகமது அலி ஜின்னா மற்றும் பாகிஸ்தான் சிந்தனையாளர் அல்லாமா முஹம்மது இக்பால் ஆகியோர்களை நினைவு கூர்ந்தார்.

தனது தேசிய இறையாண்மை மற்றும் முக்கிய நீர் வளங்களை பாதுகாப்பதில் பாகிஸ்தான் உறுதியை மீண்டும் வலியுறுத்திய அவர், காஸ்மீர் பிராந்தியத்தின் பிரச்சினைகளையும் எடுத்துறைத்தார்.

பாகிஸ்தான் அமைதியான சகவாழ்வுக்கும், ஜம்மு மற்றும் காஷ்மீர் தகராறு உள்ளிட்ட பிராந்தியப் பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் மூலம் தீர்ப்பதற்கும் உறுதிபூண்ட ஒரு அமைதியான நாடாகத் தொடர்கிறது என்று வலியுறுத்தினார்.
இலங்கை-பாகிஸ்தான் நீண்டகாலமாக வர்த்தக ஒப்பந்தத்தின் (FTA) கீழ் ஏற்பட்டுள்ளன சமீபத்திய நிறுவன ரீதியான முன்னேற்றங்களை எடுத்துரைத்த உயர்ஸ்தானிகர் , இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கு அவர்களின் நீடித்த அன்பிற்காக ஆழ்ந்த நன்றியை தெரிவித்தார்.

பஞ்சாப் மற்றும் கராச்சியில் உள்ள மையங்களுக்கும் இலங்கை வணிகங்களுக்கும் இடையிலான தொழில்துறை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் இணைப்புகள், இரத்தினக் கற்கள் மற்றும் ஆபரணங்களில் தொழில்நுட்பப் பரிமாற்றம், தேயிலை, அன்னாசி பழம் மற்றும் அவகாடோ போன்ற விவசாய ஏற்றுமதி களுக்கு வர்த்தகத் தடை நீக்கம், மற்றும்

இலங்கையின் மருந்துத் துறையில் பாகிஸ்தான் நிறுவனங்களின் முதலீடு விரிவடைதல் ஆகியவற்றில் இருதரப்பு உத்வேகம் அதிகரித்து வருவதை அவர் குறிப்பிட்டார். ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் (EDB) நடைபெறவிருக்கும் இலங்கை-பாகிஸ்தான் வர்த்தக சபையில் , நடைபெற்று வரும் கலாச்சார, கல்வி பௌத்த சுற்றுலா முயற்சிகளையும் அவர் வலியுறுத்தினார்.

பாகிஸ்தான்-இலங்கை உறவு மேலும் வலுப்பெறும் என மீண்டும் உறுதிப்படுத்திய அவர்,காலத்தால் சோதிக்கப்பட்டது, நீண்ட காலம் நிலைத்திருக்கக்கூடிய, நிபந்தனையற்ற துமான இந்த உறவை வெளிப்படுத்தும் வகையில், இலங்கை முக்கியப் பிரமுகர்கள், தூதரக அதிகாரிகள், வணிகத் தலைவர்கள், ஊடகத்தினர் மற்றும் பாகிஸ்தான் புலம்பெயர் சமூகத்தினர் எனப் பலர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(அஷ்ரப் ஏ சமத்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *