உள்நாடு

நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலய வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்.

ISRC நிறுவனத்தின் அனுசரணையில் நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இருமாடி வகுப்பறைக் கட்டடமும், கலாச்சார மண்டபமும் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இக்கட்டடங்களின் திறப்பு விழா வியாழக்கிழமை (06) பாடசாலை அதிபர் இக்பால் மூசீன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம். ரிகாஸ் கலந்து கொண்டார். விசேட அதிதிகளாக ISRC நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று பணிப்பாளர் அஹ்மத் சையாப், புத்தளம் வலயக் கல்வி அலுவலகத்தின் கல்வி அபிவிருத்தி உதவி கல்விப் பணிப்பாளர் திருமதி காந்திலதா மற்றும் கற்பிட்டி கல்விக் கோட்டப் பணிப்பாளர் ஏ.எம். ஜவாத், நுரைச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக நுரைச்சோலை ஜாமிஉல் ஹஸனாத் பெரிய பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் பாஜில், கொலனி அல்ஹுதா பள்ளிவாசல் தலைவர் இல்ஹாம், நுரைச்சோலை கிராம சேவகர் எம். நௌபல் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

மேலும் ஆசிரியர் ஆசிரியைகள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க நிர்வாகிகள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பாடசாலையின் கல்வி வளர்ச்சியில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் முக்கிய அடையாளமாக இக்கட்டடம் அமையவுள்ளது.

இத்தகைய பெறுமதிமிக்க பங்களிப்பை வழங்கிய ISRC நிறுவனத்திற்கும், இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற உழைத்த அனைவருக்கும் பாடசாலை நிர்வாகம் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

(எம்.யூ.எம்.சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *