போதைப்பொருள் பிரச்சினை காரணமாகவே சிறைகளில் போதல்கள்

சிறைச்சாலைகளில் நேற்றிரவு முதல் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்து அவர் மேலும் கூறியதாவது,
சிறைச்சாலைகளில் போதைப்பொருள் பிரச்சினை காரணமாகவே மோதல்கள் ஏற்பட்டுள்ளன.பிரச்சினைகள் ஏற்பட்ட சிறைச்சாலைகளில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.திட்டமிட்ட வகையில் இந்த மோதல்கள் முன்னெடுக்கப்படுவதாக எங்களுக்கு தெரிகிறது.
இருந்தாலும் முழுமையான விசாரணை நடத்தாமல் இதனை சரியாக கூற முடியாது. இந்த விடயத்தை அரசு தீவிரமாக கவனித்து வருகிறது.ஜனாதிபதி தலைமையில் இன்று விசேட கூட்டமொன்றும் நடக்கவுள்ளது. அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.
