உள்நாடு

கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவினருடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை கட்டியெழுப்பும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், நாட்டில் கிரிக்கெட் விளையாட்டின் முன்னேற்றத்திற்காக அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு குறித்தும் ஜனாதிபதியின் அவதானம் செலுத்தப்பட்டது.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்ரகீர்த்தி, இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவின் தலைவர் எரான் விக்ரமரத்ன மற்றும் அதன் ஏனைய உறுப்பினர்களான ரொஷான் மஹாநாம, அவந்தி கொழம்பகே, உபுல் குமரப்பெரும, துஷிர ரதெல்ல, சிதத் வெத்தமுனி,டினால் பிலிப் ஆகியோரும் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *