உள்நாடு

பெல்லன்வில துப்பாக்கி சூடு;ஒருவர் பலி;இருவர் கைது

பெல்லன்வில பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெல்லன்வில பகுதியில் நேற்று (25) இரவு உணவக உரிமையாளர் ஒருவர் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் படுகாயமடைந்த உணவக உரிமையாளர் உடனடியாக களுபோவில போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரையும் நவகமுவ பகுதியில் வைத்து பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *