பேருவளை உதைப்பந்தாட்டச் சங்கம் நடாத்தும் தலைவர் வெற்றிக் கிண்ணத்திற்கான இறுதிப்போட்டி இன்று
பேருவளை உதைப்பந்தாட்டச் சங்கம் தலைவர் வெற்றிக் கிண்ணத்திற்காக நடாத்தும் நொக்கவுட் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி இன்று (25) சனிக் கிழமை பி.ப. 3.30 மணிக்கு தர்கா நகர் ஸாஹிராக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும். இறுதிப் போட்டியில் ரெட் ஸ்டார் உதைப்பந்தாட்ட கழகமும் கிரேட் ஸ்டார் உதைப்பந்தாட்ட கழகமும் மோதவுள்ளன. இன்றைய தினம் நடைபெறும் பரிசளிப்பு விழாவுக்கு பேருவளை உதைப்பட்டாட்டச் சங்கத் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். றிஸ்வான் தலைமை வகிப்பார். இலங்கை உதைப்பந்தாட்டச் சம்மேளன தலைவர் ஜஸ்வர் உமர், களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சன்ஜீவ ரணசிங்க ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொள்வர். இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளன உப தலைவர்களான ரஞ்சித் ரொட்ரிகோ, கலாநிதி மனிலால் பிரணாந்து ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், பேருவளை பிரதேச சபைத் தலைவர் பைஸான் நைஸர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். அஸ்லம், இலங்கை மருந்தக கூட்டுத்தாபணத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ரூமி ஹாஷிம் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளதாக பேருவளை உதைப்பந்தாட்ட சங்க செயலாளர் முஹம்மத் ஸினான் தெரிவித்தார். பேருவளை உதைப்பந்தாட்ட சங்க முக்கியஸ்தர்கள், மேற்படி உதைப்பந்தாட்டச் சங்கத்தில் அங்கம் வகிக்கும் விளையாட்டுக் கழக முக்கியஸ்தர்கள், மற்றும் பல பிரமுகர்கள் நிகழ்வில் கலந்து கொள்வர்.

பேருவளை பீ.எம். முக்தார்
