பிரதமர் ஹரிணியுடன் சவூதி அரேபிய தூதுவர் சந்திப்பு
தனது பதவிக்காலத்தை நிறைவு செய்யும் இலங்கைக்கான சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்களுடனான சந்திப்பு (16) இன்று வியாழக்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இதன்போது, கடந்த வருடம் இந்நாடு எதிர்கொண்ட டித்வா சூறாவளியின்போது சவூதி அரேபிய அரசு வழங்கிய ஒத்துழைப்புக்கு தூதுவரிடம் நன்றியைத் தெரிவித்ததோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இச்சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டது.





